கன்னட பட காந்தாராவை ஓரம் கட்டுமா? பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம்…!

பொன்னியின் செல்வன் படத்திற்கு அடுத்தபடியாக கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் சக்கை போடு போட்டு வருகிறது.அது போல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கும், விக்ரம் நடிக்கும் தங்கலான் படமும் இருக்கும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

காதல், காமெடி, ஆக்சன் என்று வலம் வந்து கொண்டிருந்த திரைப்படத்துறை தற்போது சற்று மாறி வரலாற்று சம்பந்தப்பட்ட கதைகளையும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தக்கூடிய கதைகளையும் மக்களுக்கு தருவதில் மிகுந்த முனைப்போடு இயங்கி வருகிறது.

கன்னடத்தில் காந்தாரா படம் பெருமளவு ரீச் ஆனதை தொடர்ந்து தமிழ் ஹிந்தி தெலுங்கு என மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் தற்போது வசூலை வாரி குவித்து வருவதோடு ரசிகர்களின் பெருவாரியான ஆதரவையும் பெற்றுவிட்டது.

இதனை அடுத்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் தங்கலான்  திரைப்படமும் ஒரு மறைக்கப்பட்ட சமுதாயத்தின் வரலாற்றை முக்கிய பின்னணியாக கொண்டு வர இருக்கிறது.

 இந்தப் படத்தில் சியான் விக்ரம் நடித்துள்ளார். ஏற்கனவே நடிப்பில் பலவிதமான பரிமாணங்களை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தக் கூடிய இவர் இந்த படத்திலும் தனது நடிப்பால் உயர்ந்து நிற்பார்.

மேலும் ரசிகர்களை கவர்ந்து ஈர்ப்பார் என்ற நிலையில் இந்தப் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது மிக மும்மரமாக நடந்து வரக்கூடிய வேலையில் நடிகர் விக்ரம் இந்த கேரக்டராகவே மாறிவிட்டார் என்று கூறும் அளவுக்கு தான் விறுவிறுப்பாக படப்பணிகள் சென்று கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இயக்குனர் பா ரஞ்சித் நினைத்த விஷயத்தை அப்படியே மக்களுக்காக அர்ப்பணிக்க கூடிய தன்மை இருப்பதால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் காந்தாரா  படத்தை பின்னுக்குத் தள்ளி வசூலில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது இடைவிடாது நடக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆனது வரும் மார்ச் மாதம் வரை தொடரும் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தை காணும் ஆவலில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …