என்னது கைதி ரீமேக் ஹிந்தி திரைப்படத்தில் யார் நடிக்க இருக்கிறாரா? தெரியுமா? உள்ளே வாங்க பார்க்கலாம்…!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி அனைவருக்கும் கூற வேண்டிய அவசியம் இல்லை. கமலஹாசனின் இரண்டாவது பாகமான விக்ரம் படத்தை எடுத்து மாபெரும் வசூல் சாதனையை புரிந்தவர்.

 இவரும் வந்திய தேவனாக நடித்த கார்த்தியும்  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இணைந்து பணியாற்றிய படம்தான் கைதி இந்தத் திரைப்படம் கார்த்திக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

 தற்போது கைதி இரண்டாம் பாகம் தமிழில் படப்பிடிக்கப்பட உள்ள நிலையில் இதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

 அதில் கார்த்திக் நடித்த வேடத்தை அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார். இந்தப் படமானது கைதி என்ற பெயருக்கு பதிலாக போலோ என்ற பெயரில் வெளிவர உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படத்தை அஜய் தேவ்கன் இயக்க உள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை தபு நடித்து வருகிறார்.

 தமிழில் கார்த்திவுடன் படம் முழுவதும் பயணிக்கக்கூடிய ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டர் உள்ளது. அந்த கேரக்டரை பெண் பாத்திரம் ஆக மாற்றி அதில் தபுவை நடிக்க வைத்துள்ளார்கள்.

 இதனை அடுத்து ஆடை படத்தில் அரை நிர்வாணம் ஆக நடித்த அமலா பால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக இணைந்திருக்கிறார் என்ற அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆவடலை தூண்டி உள்ளது.

 ஹிந்தியில் அமலாபால் நடிக்கின்ற முதல் படமாக இது இருக்கும் என்பதோடு ஏற்கனவே தபு கதாநாயகியாக நடிக்கும் போது அமலாபாலுக்கு என்ன ரோல் இதில் உள்ளது என்பதை பற்றி ரசிகர்கள் இப்போதே யூகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எனினும் அமலாபாலுக்கு உரிய அந்த கேரக்டர் என்பது என்ன என்பதை இனி வரும் நாட்களில் கட்டாயம் தெரியும்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் இதன் மூலம் அமலா பாலுக்கு மேலும் மேலும் ஹிந்தி பட வாய்ப்புகள் வரலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …