தளபதி விஜய் பாடிய ரஞ்சிதமே… பாடல் வாரிசு திரைப்படத்தில் இன்று வெளி வருகிறது…!

 பீன்ஸ் பட தோல்விக்கு பின்னால் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய படம் தான் வாரிசு இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து திரைப்படத்திற்கு வரி சேர்த்து இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்த படத்திற்கான இசையை தமன் அமைத்திருக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட தருவாயில் மற்ற பணிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இதனை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்களை வெளியாக்கி ரசிகர்களின் வரவேற்பை பட குழு பெற்றதோடு இந்த படம் பொங்கலுக்கு வரும் என்ற அறிவிப்பை அறிவித்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்கள்.

நல்ல பாடக்கூடிய திறன் பெற்ற நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் ரஞ்சிதமே எனும் தொடங்கும் பாடலை  பாடி இருக்கிறார். இந்தப் பாடலை விவேக் எழுதியிருக்கிறார்.

மேலும் இந்தப் பாடல் ஆனது இன்று வெளிவரக்கூடிய நிலையில் உள்ளது என்று பட குழு கூறியுள்ளது. பிரமோ வீடியோவாக வெளிவரக்கூடிய எந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தும் என்று பட குழு கூறியுள்ளது.

ஏற்கனவே ஏகப்பட்ட  எதிர்பார்ப்பில் வெளிவந்த பீஸ்ட் படமானது அட்ட பிளாப்பை தளபதி விஜய்க்கு தந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்து விட்டார்கள்.

அந்த சோகத்தில் இருந்து மீண்டு அவர்கள் உற்சாகத்தோடு  இந்தப் படம் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் பொங்கல் விருந்தாக வரக்கூடிய இந்த படம் தல அஜித் படத்தோடு போட்டியிடக்கூடிய படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் தற்போது இருந்தே அதற்கு ஆயத்தம் ஆகி வருகிறார்கள்.

 விரைவில் வெளிவரும் இந்த வாரிசு திரைப்படம் தல அஜித் படத்தோடு போட்டி போட்டு வசூலை வாரிக் வைக்குமா அல்லது பிரின்ஸ் படத்தை போல ஊற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …