லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இடத்திற்கு வெச்சாச்சு ஆப்பு…. இனி நம்பர் ஒன் குந்தவை திரிஷாவா?

தமிழ் சினிமாவை பொருத்தவரை நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நயன்தாரா. திருமணம் ஆகிவிட்டாலும் கூட இவரின் படத்திற்கு பஞ்சமில்லை என்று கூறும் அளவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது.

 இவர் விஜய், அஜித் என பல முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போது அந்த இடத்தை வேறொரு கதாநாயகி தட்டிப்பறித்துச் செல்லக்கூடிய சூழல் உருவாகிவிட்டது.

 அந்த நாயகி வேறு யாரும் இல்லை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் குந்தவைப் பிராட்டியாக வந்து ரசிகர்களின் மனதை கிறங்க வைத்த திரிஷா தான்.

இவர் தற்போது தமிழில் இரண்டாவது ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் என்று கூறும் அளவுக்கு தற்போது வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

 இதனைத் தொடர்ந்து இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்க  இருக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்.

மேலும் இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து கில்லி ,குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது விதையோடு இவர் ஜோடி சேர்ந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆவலையும் தூண்டி உள்ளது.

 அதுமட்டுமல்ல விஜய்க்கு அடுத்ததாக இவர் மீண்டும் அஜித்துடன் ஜோடி போட இருக்கிறார். தற்போது துணிவு திரைப்படத்தை முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்திலும் திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக வர இருக்கிறார். இவருடன் ஏற்கனவே அவர் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 இப்படி அடுத்தடுத்த முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வரக்கூடிய திரிஷா பிஸியாக இருக்கக்கூடிய இந்த வேலையில் நயன்தாரா கொஞ்சம் போல் அப்செட்டில் தான் இருக்கிறாராம்.

 மேலும் இந்த இரண்டு படங்களிலும் நயன்தாரா நடிக்க இருப்பார் என்று கூறப்பட்ட வேளையில் அது மாறி தற்போது அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு சென்றுள்ளதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

இதனை அடுத்து தன்னுடைய நம்பர் ஒன் இடத்தை இவர் தட்டி பறிப்பாரா என்பது போன்ற எண்ணங்கள் அவர் மத்தியில் ஏற்பட்டு இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள்  பேசிக் கொள்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …