லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் மாபெரும் கிட்டை தந்ததோடு வசூலையும் வாரிக் கொடுத்தது. அதுபோல தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் எப்படி ஒரு மாசான ரோலக்ஸ் கேரக்டரை சூர்யாவுக்கு கொடுத்தாரோ அதுபோல இந்தப் படத்திலும் ஒரு கேரக்டர் உள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும் தற்போது தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மற்றும் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு இருக்கக்கூடிய இவர் இந்த படத்தை பிரம்மாண்டமான முறையில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக பல்வேறு மொழிகளை சேர்ந்த நடிகர்களை நடிக்க வைக்க இவர் வியூகம் போட்டு வருகிறார்.
இந்தத் திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்தை கொண்ட திரைப்படம் என்பதால் இதில் நடிகர் விஜய் மும்பையைச் சேர்ந்த ஒரு தாதாவாக இருப்பார் என தெரிய வருகிறது.மேலும் இந்தப் படத்துக்கு வில்லனாக சஞ்சய் தத் விஷால் ஆகியோரை நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டு இருக்கிறார்.
இது போலவே படத்திற்கான கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ள நிலையில் தற்போது தளபதி 67 படத்தில் ஒரு மாசான கேமியோ ரோல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அது சரி எப்படி விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினாரோ அதேபோல் இந்த ரோலில் யார் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தப் போகிறார் என்பதை நீங்கள் யோசிப்பது எங்களுக்கு புரிந்து விட்டது.
அந்தக் குறிப்பான கெத்தான வேடத்தை தற்போது கமலஹாசனை நடிக்க வைக்கலாமா என்று லோகேஷ் எண்ணி வருவதாகவும் அதற்காக வேலையில் களம் இறங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக கமலின் ராஜ் கமல் ஃபிலிம் நிறுவனம் செயல்பட உள்ளதால் விக்ரம் படத்தின் தொடர்ச்சியை போல் இப்படத்தின் கதை இருப்பதாலும் காப்பிரைட் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக கமலையும் இணை தயாரிப்பாளராக சேர்த்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.