அட இது எப்ப நடந்தது …நம்ம லிஸ்டில் இல்லையே… கார்த்திக்கு வில்லனாகவும் நடிகர் லாரன்ஸ்…!!

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் வெற்றிக்கு பின்னால் கார்த்தி தற்போது நடித்துவரும் படம் பார்ட் 2 – வான கைதி திரைப்படம் தான். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக விரைவில் வெளிவர உள்ளது.

 தற்போது இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் விரைவில் கார்த்திக்கை வைத்து கைதி பார்ட் 2 வை இயக்க உள்ளார்.

 இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் உடன் நரேன், ஜார்ஜ் மரியான் மற்றும் ஹரீஷ், உத்தமன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள்.இதன் முதல் பாகமானது 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. எந்த விதமான கெட்டப்பும் இல்லாமல் நடிப்பை மட்டுமே நம்பி இந்த படத்தில் கார்த்திக் நடித்திருந்தார்.

 மேலும் இந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் இவர் நகர்த்திச் சென்றதின் காரணமாக நல்ல பெயர் கிடைத்தது.  இந்த திரைப்படத்தில் ஒற்றை அழுக்கு லுங்கி உடன் மட்டுமே நடித்திருப்பார். சாக்லேட் பாயாக வலம் வந்த கார்த்திக்கு இந்த சேலஞ்சிங்கான ரோல் மிகவும் சிறப்பாக பொருந்தி இருந்ததால் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார்.

 அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் சிம்ம குரலாக காட்டித் தன்னை வெளிப்படுத்தி இருந்தால் தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வருவதாக அந்த படத்தில் காட்டப்பட்டது.

 நேரம் விக்ரம் படத்திற்கும் இந்த படத்திற்கும் இடையே ஒரு சின்ன தொடர்பு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருந்தது. கைது படத்தில் பெரிய அளவிலான போதைப் பொருளை கைப்பற்ற காரணமாக கார்த்தி இருந்த நிலையில் விக்ரம் படத்தில் அவரை ரோலக்ஸ் தேடுவதாக காட்சிகள் அமைந்திருந்தது நினைவிருக்கலாம்.

 இந்நிலையில் கைது இரண்டு படத்தில் சூர்யாவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக லாரன்ஸ் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

எனவே கதைப்படி விஜய் சேதுபதிக்கு பதிலாக லாரன்ஸை ரோலக்ஸ் ஆக நியமிப்பதாக கதை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் லாரன்ஸ் இந்த படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்க உள்ளார். இதை எடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த படத்தை காண தற்போதைய தயாராகி விட்டார்கள் என்று கூற வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam