சிபாரிசுகளுக்கெல்லாம் இங்கு வேலையே இல்லை… அண்ணனுக்காக சிபாரிசு ஐஸ்வர்யா ராஜேஷ்…!!

ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் முன்னணி ஹீரோயின்களின் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற தென்னிந்திய மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை விருதுகளை பெறக்கூடிய வல்லமை பெற்றவர் போன்ற பெயர்களை பெற்றுவிட்டதால் என்னவோ இவருக்கு தலைகணம் கூடி விட்டதாக செய்திகள் வருவதோடு மட்டுமல்லாமல் சில நாட்களாகவே இவரை பற்றிய அதிக அளவு சர்ச்சைகள் வலைதளத்தில் உலா வந்து கொண்டுள்ளது.

 மேலும் இவரது நடவடிக்கைகளில் எக்கச்சக்க மாற்றங்கள் தற்போது தெரிவதாக கூறிக் கொள்கிறார்கள். குறிப்பாக இவர் அடிக்கடி பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்கு செல்வதும் சக நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதால் இவரது பெயர் தற்போது டேமேஜ் ஆகிவிட்டது.

 மேலும் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்போது அதற்கு மாறாக கிளாமரில் களம் இறங்கி இருப்பதால் பல பேர் இவரை சந்தேக கண்ணோடு பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கும் இவரது அண்ணனுக்காக ஓட்டு கேட்டு ரசிகர்களிடம் நோஸ்கட்டை பெற்றிருக்கிறார்.

 இவர் அண்ணன் மணிகண்டன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைதியாக இருக்கக்கூடிய இவர் சில நாட்களுக்கு முன் தனலட்சுமி உடன் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதனால் நாமினேசன் பட்டியலில் இடம் பிடித்திருந்த அண்ணனை காப்பாற்றுவதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் தன் அண்ணனுக்காக சோசியல் மீடியாவில் ஓட்டு கேட்டு வந்தார்.

 இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் மாஸ்டர் அல்லது ராம் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மணிகண்டனுக்கு தான் ஓட்டுகள் குறைவாக உள்ளது. அந்த வகையில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்ற நிலையில் ஐஸ்வர்யா ராய் அண்ணனை காப்பாற்ற நினைத்து ஓட்டு கேட்டு இருக்கிறார்.

 இதைப் பார்த்த ரசிகர்கள் இது  தேவையில்லாத வேலை உங்கள் அண்ணன் நன்றாக விளையாடினால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பார் இல்லையென்றால் எலிமினேட் ஆவார். நீங்கள் நடிக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …