.தொடர்ந்து…. ஏமாற்றம் தந்த பிரின்ஸ்… தனியாக களம் இறங்க தயாரான சிவகார்த்திகேயன் அயலான்….!!

டாக்டர், டான் படத்தின் மூலம் 100 கோடிக்கு அதிகமாக வசூலை வாரி குவித்த சிவகார்த்திகேயன் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த படமான பிரின்ஸ் படம் ஊத்திக் கொண்டது என்று கூறலாம்.

 சற்றே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த இந்தப் படம் ஊற்றிக்கொண்டதன் மூலம் இவரின் அடுத்த படமான அயலான் படத்தை எந்த ஒரு நடிகர்களின் போட்டிகளிலும் இல்லாத போது களம் இறக்க தற்போது முடிவு செய்து இருக்கிறார்கள்.

 எனவே கண்டிப்பாக அயலான் சிங்கிளாக வருகிறது என்பது தற்போது முடிவாகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயவான் திரைப்படம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்போது வெளிவரும் என்கின்ற உறுதியான அறிவிப்பினை அறிந்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இந்த படம் வெளிவருவதற்கு தாமதமாக காரணம் பட்ஜெட் பிரச்சனை மற்றும் கிராபிக்ஸ் பணிகள் என்று கூறலாம். இதனை அடுத்து அயலான் படத்திற்கான இரண்டு ரிலீஸ் தேதிகளை பட குழு தற்போது முடிவு செய்துள்ளது.

 மேலும் இந்தப் படமானது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணிகள் உருவாக்கியுள்ளது.இந்தப் படத்தில் ராகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடி இருக்கிறது.  இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா தயாரித்து வந்தார் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அதிலிருந்து அவர் விலக கே ஜி ஆர் நிறுவனம் இந்த படத்தை கைப்பற்றியது.

இப்போது படப்பிடிப்பின் பணிகள் வேகமாக முடிவு பெற்ற நிலையில் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே தாமதம் ஆக்கிக் கொண்டு வந்தது. இதனை அடுத்து இந்தப் படத்தின் ரிலீஸ் செய்தியை பட குழு முடிவு செய்து மார்ச் 24 அல்லது 25ஆம் தேதி வெளிவரலாம் என்பது போல கூறியுள்ளது.

இதனை அடுத்து பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் மட்டுமல்லாமல் தனுஷ், சிம்பு, ரஜினியின் படங்கள் வரிசை கட்டி நிற்பதால் தனது படத்தை மார்ச் மாதம் சிங்கிளாக வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தற்போது இவர் முடிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வித்தியாசமான வேடமாக ஏலியன் வேடத்தில் இவர் நடித்திருக்கிறார். எனவே தமிழ் திரையுலகை பொருத்தவரை முதல் முதலாக வெளிவரக்கூடிய ஏலியன் திரைப்படமாக இது இருக்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …