வித்தியாசமான லுக்கில் நந்தன் திரைப்படத்தில் சசிகுமார்… மிரட்டிய ஃபர்ஸ்ட் லுக் …!

நந்தன் திரைப்படத்தில் இதுவரை யாரும் காட்டாத கெட்டப்பில் வித்தியாசமான முறையில் நடிக்க இருக்கிறார் நடிகர் சசிகுமார். இந்த படம் குறித்த போஸ்டர் தற்போது வைரலாக வெளிவந்து அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது.

 நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனர் என பன்முக திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த புதிய படத்தின் பெயர் தான் நந்தன். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

 இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரை உலகின் முன்னணி விநியோகிஸ்தான உதயநிதி ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் படமானது கத்துக்குட்டி உடன்பிறப்பே படங்களை இயக்கிய இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் தயாராகி வருகிறது.

 மேலும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவருடன் நடிகரும்  இயக்குனருமான பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

 இந்தப் படத்தின் ஒளிப்பதிவை  கிடாயின் கருணையின் மனு புகழ் சரண் ஓளிப்பதிவு செய்ய உள்ளார். மேலும் இந்த படத்தின் கதையானது எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் படபிடிப்பானது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

 இதுவரை சசிகுமார் செய்யாத வேடத்தில் எந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

 

எனவே இந்த படம் விரைவில் திரைக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்து சாதனை புரியும் என்று அனைவரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படு வித்தியாசமான முறையில் இருப்பதால் படமும் அதே படி தான் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த படம் அமையுமா? என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …