தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்த படமானது வரும் பொங்கலுக்கு வெளிவரக்கூடிய சூழ்நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர் விக்ரம் படத்தில் மாபெரும் வெற்றியை தந்த லோகேஷ் கனகராஜ் இணைந்து தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பதற்காக அர்ஜுனிடம் கேட்கப்பட்டது நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருந்த நிலையில் அவர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனை அடுத்து தற்போது 90களில் ஃபேவரைட் நடிகராக திகழ்ந்த ஒருவரை வில்லன் கேரக்டரில் புக் செய்ய முயன்ற போது அவரும் நோ நோ என்று சொல்லி இருப்பதின் காரணம் என்ன என்று புரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
மேலும் தளபதி 67 என்ற படமானது ஒரு கேங்ஸ்டர் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆங்கில படமான , ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்னும் படத்தின் ரீமேக் எனவும் சொல்லி வருகிறார்கள்.
கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் இருப்பதால் இதில் விஜய்க்கு வில்லனாக 7 நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.இதில் ஏற்கனவே சஞ்சய் தத், விஷால் நடிப்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது. இயக்குனர் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் நடிக்க மறுத்த நிலையில் தற்போது ‘நவரச நாயகன்’ கார்த்திக்கிடம் தளபதி 67 ல் நடிக்க லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார்.
கார்த்திக்குக்கு இந்த படத்தின் கதையும் பிடித்துவிட்டதாம். இருந்தாலும் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார். கார்த்திக் நடிக்காமல் போனதற்கு தன்னுடைய உடல்நிலையை காரணம் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் அடுத்தது அடுத்து யாரை களம் இறங்குவார் என்று தெரியாமல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.