போடுடா… வெடிய…. செல்வராகவன் நடித்த பகாசூரன் படத்தின் டிரைலர் வெளிவந்ததா?…!!

தமிழ் திரை உலகில் தன்னை இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டு தனது தம்பியை நடிகராக களம் இறக்கி வெற்றிகண்ட இயக்குனர்களின் வரிசையில் நிற்பவர் தான் செல்வராகவன். இவரின் அற்புதமான பட இயக்கக்கூடிய திறனை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட இந்த இயக்குனர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறியது ஆசிரியத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இன்று பல இயக்குனர்கள்  நடிகராக அவதாரம் எடுத்து வருவது ஒன்று புதிதல்ல.

 பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் மோகன் ஜி. அதன் பின்னர் இவர் இயக்கிய திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் சர்ச்சையை கிளப்பிவிட்ட படமாகவே அவை இருந்தது.

இதனை அடுத்து இவர் இயக்குனரான செல்வராக அவனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்திருக்கிறார்.

 இதில் நட்டி நடராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ஏற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த படத்திற்கான இசையை சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

ஏறக்குறைய இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பின்னணிப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை இந்த பட குழு உறுதி செய்துள்ளது.

 இதனை அடுத்து இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த சூழ்நிலையில் தற்போது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இது ஏற்பட்டுள்ளது.

 மேலும் இந்தப் படத்தில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது போல உள்ள டிரைலரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

மிகவும் வித்தியாசமான அம்சத்தோடு இருக்கும் இந்த டிரைலரை பார்த்து வரும் ரசிகர்கள் டிரைலரே எப்படி என்றால் படம் எப்படி என்று ஆச்சரியத்தோடு காத்திருக்கிறார்கள். எனவே பட குழு எந்த திரைப்படத்தை வெளியிடக்கூடிய தேதியை விரைவில் அறிவிக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …