ஜெய்லர் படத்தில் மாஸ் ஆன ரஜினியின் கதாபாத்திர பெயரை வெளியிட்ட பட குழு…!!

 சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற நிலை தற்போதும் உள்ளது. இன்று பிறந்திருக்கும் 2k கிட்ஸ்சும் சூப்பர் ஸ்டார் ரஜினி தாத்தாவாக இவர் இருக்கிறார்.

 தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் படமான ஜெய்லர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ஏற்கனவே படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கக்கூடிய வேளையில் படத்திற்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறார்.

 சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரமாண்டமான பொருட்செளவில் தயாரித்து வருகின்ற வேளையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் மலையாள நடிகரான விநாயகர், கன்னட நடிகரான சிவராஜ் குமார், ராக்கி பட ஹீரோ வசந்த் ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது 50 சதவீதமான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள சூட்டிங் விரைவில் நடந்து முடிந்து 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் இந்த திரைப்படம் வெளிவரலாம் என்ற நிலையில் உள்ளது.

 இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை பட குழு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அது என்ன என்றால் ஜெய்லர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்று நடிக்கக்கூடிய கேரக்டரின் பெயர் முத்துவேல் பாண்டியன் என்பதாகும்.

 அதனை ஒரு போஸ்டரில் குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கக்கூடிய படக்குழு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்திருக்கும் ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் எப்போது வெளிவரும் அதை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த படம்  ரஜினிகாந்தின் திரை உலக வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவிக்கும் படமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …