ஷாருக்கான் … பதான் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம்… காவி நிற பிகினி கட்டாயம் நீக்க வேண்டும் – வலுக்கும் எதிர்ப்பு…!!

 பாலிவுட் திரையுலகில் பக்காவான நடிகராக இன்றுவரை முன்னணியில் இருக்கும் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்து இருக்கும் திரைப்படம் தான் பதான்.

 இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள நிலையில் இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளுக்கு வெளிவரக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.

 மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாமும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பெஷாரம் ரங் என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.

 இதனை எடுத்து தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் இந்த பாடல் ஆனது முழுக்க முழுக்க பிகினி உடையில் தீபிகா படுகோனே ஆடக்கூடிய நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு நிறத்தில் பிகினி உடையில் இந்த பாடலுக்காக ஆடி இருக்கும் இவர் காவி நிற பிகினி உடையை அணிந்து நடனமாடி இருப்பது தற்போது கடும் எதிர்ப்பையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

 இதனை அடுத்து மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் மித்ரா இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு இந்த காட்சியை நீக்காவிட்டால் பட ரிலீஸ் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

 இதனை அடுத்து பதாம் படத்தை புறக்கணிக்க கோரி பாய் கார்டு  வைரல் ஆகிவிட்டது. அதுபோலவே இந்த ஊரில் இருக்கும் வீர சிவாஜி அமைப்பினரும் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருப்பதோடு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனாவின் உருவ பொம்மைகளை எரித்து வருகிறார்கள்.

மேலும் இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்திருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.அடுத்து இந்த பாடல் அந்த படத்தை விட்டு நீக்கப்படுமா அல்லது மாற்றங்கள் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam