இளம் இயக்குனருடன் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணன் ரகசிய திருமணமா? விவரங்கள் உள்ளே…!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை முன்னணி நடிகர்களின் வரிசையில் முக்கியமான ரோல்களில் நடித்து பிரபலமாக  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் தன்யா பாலகிருஷ்ணன்.

 இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான அறிமுக நடிகை ஆவார். இதனை அடுத்து இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி என்ற படங்களில் நடித்ததின் மூலம் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

தமிழ் மொழி மட்டும் போதும் என்று நின்று விடாமல் அக்கட தேசத்திலும் இவர் நடித்ததின் மூலம் அங்கும் ரசிகர்கள் அதிக அளவு இவருக்கு இருக்கிறார்கள். மேலும் தெலுங்கு  இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

 இந்த சூழ்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அதிக கவனத்தை செலுத்தி வரும் தன்யா தற்போது பிரபல இயக்குனர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வந்துள்ளது.

அதிலும் இவர் தமிழ் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யார் தெரியுமா? காதலில் சொதப்புவது எப்படி மாரி ஒன்று மாரி இரண்டு போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இயக்குனர் பாலாஜி மோகனுடன் சில வருடங்களாக லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரகசிய திருமணத்தை முடித்திருக்கிறார் என்ற செய்தியை தெலுங்கு நடிகையான கல்பிகா கணேஷ் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த விஷயத்தை YouTube போட்டு உடைத்திருக்கும் இவர் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைய கூடிய நிலையில் கூட இவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணத்தைப் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறி இருப்பது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 மேலும் அவர் நடித்த தெலுங்கு படங்களின் ப்ரமோஷன் பணியில் அவர் ஈடுபடாமல் இருப்பதற்கு காரணம் அவர் கணவர்தான் என்பதை அப்பட்டமாக உடைத்திருக்கிறார். தற்போது கல்பிகா பேசிய இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்ட நிலையில் தன்யா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த வீடியோவை நீக்கி விட்டாராம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …