அட்ரா சக்க விஷயம் என்ன அப்படின்னா மீண்டும் வில்லனா ஆயிட்டாரு சத்யராஜ்…!! எந்த படம் தெரியுமா?

மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  அங்காரகன்  என்பதாகும். இந்த படத்தின் பெயரிலேயே  வித்தியாசம் தெரிவதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அங்காரகன் திரைப்படத்தில் ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சத்யராஜ் பழைய ஃபாமில் வில்லனாக இந்த படத்தில் கலை கட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.

 

 இந்தப் படத்தை ஜூலியன் மற்றி மற்றும் ஜெரோமா  இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கான திரைக்கதையை ஸ்ரீபதி எழுதியுள்ளத்துடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

 இந்த படத்தில் மலையாள நடிகை யான நியா கதாநாயகியாக நடிப்பதின் மூலம் தமிழுக்கு அறிமுகம் நாயகியாக வர இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் அங்காடி தெருவில் நடித்த மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புகுட்டி, நேகா ரோஸ், குரு சந்திரன், கே சி பி பிரபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடலான ஜாலியோ ஜிம்கானா திரைப்பட பாடலை எழுதிய கு கார்த்திக் இந்த திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் வசனங்களை பொறுத்தவரை கருந்தேள் ராஜேஷ் இந்த படத்திற்கான வசனத்தில் பட்டையை கிளப்பி இருப்பதாக தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரலாம் என்ற சூழ்நிலையில் தற்போது படப்பிடிப்புகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

 மேலும் சத்யராஜ் வில்லனாக நடிக்கக்கூடிய இந்த படத்தை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வில்லனாக நடிக்கும் சத்யராஜுக்கு பன்ஞ்ச் டயலாக்குகள் ஏதேனும் இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா? அதுவும் தகடு, தகடு என்பது போல என்ற பழைய அந்த நாட்களை நினைவுபடுத்தி சத்யராஜின் ரோல் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் தற்போது கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …