ரெட் ஜெய்ண்ட் மூவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தயாரிப்பாளரும், விநியோகிஸ்தரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் தீவிரமாக களம் இறங்கியதின் காரணமாக சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவாக மாறினார்.
ஆரம்ப நாட்களில் திரைப்படங்களை தயாரித்து வந்த இவர் நடிகர் என அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் குறிப்பிடத்தக்க விதத்தில் இவரது நடிப்புத் திறன் வெளிபட்டு இருந்தது.
இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். உதய் அண்ணா என்று அனைவராலும் அன்போடு அழைக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
இதனை அடுத்து இவர் கமலஹாசன் உடன் நடிக்கக்கூடிய படத்திலிருந்து நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். அது மட்டுமல்லாமல் இவரது கடைசி படமாக மாமன்னன் திரைப்படம் விளங்கும் என்று அறிவித்த உடனேயே ரசிகர்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
தமிழக மக்களுக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தால் சினிமா துறையில் இருந்து விடுபட்டு முழுநேர அரசியல்வாதியாக அரசியலில் மட்டும் கவனத்தைச் செலுத்த போவதாக அவர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை தந்த போதிலும் ஒரு நல்ல கலைஞர் திரை துறையை தொலைத்து விட்டு போகிறாரே என்று ஏக்கம் மக்களிடையே உள்ளது.
இதனை அடுத்து முழு நேர அரசியலில் களம் காண இருக்கும் உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் மூவி நிறுவனத்தின் பொறுப்புக்கள் அனைத்தும் அவரது மனைவியான கிருத்திகாவிற்கு கைமாற உள்ளது என்ற செய்திகள் வந்துள்ளது.
இதனை அடுத்து இனி உதயநிதி ஸ்டாலின் முழுமையான கவனத்தை மக்கள் வளர்ச்சிக்காக செலுத்துவார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனை எடுத்து முதல்வராக இருக்கும் இவரது அப்பாவை போல இவரும் நாட்டு மக்களுக்கு தன்னால் இயன்ற அளவு பாடுபடுவார் என்ற என்ன அலைகள் எழுந்துள்ள நிலையில், இது முற்றிலும் வாரிசு அரசியலுக்கு அடிப்படையான ஒன்றுதான்.
இன்று அமைச்சரானவர் நாளை முதல்வராகலாம் ஏன் பிரதமர் கூடி ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் செய்திகள் அடிபட்டு வருகிறது.