வந்தாச்சு வந்தாச்சு… சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட்…! டிசம்பர் 30 திரையில் பார்க்கலாம் வாங்க…!!

 யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கக்கூடிய அதி பயங்கர ஹாரர் திரைப்படம் தான் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட். இந்த படத்தின் பெயரிலேயே  படம் எதைச் சார்ந்து இருக்கும் என்ற ஒரு கற்பனையை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.

 எனவே அந்தப் படம் நீங்கள் கற்பனை செய்யும் விதத்தில் இருக்குமா? அல்லது கற்பனைக்கு எட்டாத வகையில் ஒரு புது டிராக்டில் படத்தை கொடுத்திருப்பார்களா? என்பது வரும் டிசம்பர் 30 திரையரங்குக்கு வரும் எந்த படத்தை பார்த்தால் தெரிந்து விடும்.

 மேலும் இந்தப் படத்தில் சன்னி லியோன் இரண்டு வித கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். அதில் ஒன்று ராணியாகவும் மற்றொன்று பேயாகவும் இவர் தன்னை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

 அடுத்து இந்த படத்தில் இவருடன் இணைந்து சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோர் பல முக்கிய கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெளிவந்த இந்த படத்தின் டிரைலர் படு வைரலாக இணையத்தில் பரவியதோடு ரசிகைகள் மத்தியில் திகிலையும் ஏற்படுத்தியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும்  கிராபிக்ஸ் பணிகளுக்காக பல நாட்களை எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது எந்த படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் நம்மை மிரட்ட வருகிறது.

 மேலும் அதே டிசம்பர் 30 திரிஷா நடித்த ராங்கி, விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன், பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி படங்களும் வெளிவரக்கூடிய நிலையில் ஹாரர் மூவியான இந்த திரைப்படமும் வந்து பட்டையை கிளப்பும்.

அந்த வகையில் ரசிகர்களின் ஆதரவோடு அதிக அளவு வசூலை குவிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பட குழுவுக்கு ரசிகர்கள் அனைவரும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …