2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படம் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்ததால் பெருவாரியான மக்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸ் கிட்டை தந்தது. உலக அளவில் இதனுடைய வசூல் இன்று வரை முறியடிக்க பட முடியாத ஒன்றாகி விட்டது.
அந்த சூழ்நிலையில் நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாவது பகுதியான அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் தற்போது திரைக்கு வெளிவந்து சக்கை போடு போட்டு வருகிறது.
உலக மக்களின் கண்களுக்கு விருந்தாக இருக்கும் இந்த திரைப்படம் மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளவு கதைக்களத்தை அமைத்திருப்பதோடு தொழில்நுட்ப புரட்சியையும் பண்ணி உள்ளது என்று கூறலாம். இந்தப் படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை ஒரு நல்ல விஷுவல் ட்ரீட் என்று கூறுகிறார்கள்.
மேலும் இப்படம் வெளிவந்து இன்றோடு மூன்று,நான்கு நாட்கள் ஆகிறது. அந்த வகையில் மூன்று நாட்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த வசூலை சொன்னால் கிறு கிறுத்து போய்விடுவீர்கள்.
தமிழ் திரை உலகில் வெளிவந்த விக்ரம் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று படங்களின் வசூல்களை எல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய அளவில் இதுவரை உலக அளவில் சுமார் 3500 கோடி அளவு வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து இந்தப் படமானது 2500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 3500 கோடி வசூலை செய்துவிட்ட நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள். பல மொழிகளில் வெளிவந்திருக்க கூடிய இந்த திரைப்படம் தற்போது சக்கை போடு போட்டு வருகிறது என்பது அதனுடைய வசூலில் இருந்தே புரிந்து விட்டது.