பெரிய திரையில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு எப்படி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதுபோலவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க கூடிய நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ஒவ்வொரு வாரமும் வெளிவந்து ரசிகர்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும்.
அந்த வரிசையில் தற்போது விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது என்று நான் கூற வேண்டும்.மேலும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இவர் இந்த இரண்டு சேனலுமே தரமான சீரியல்களை வழங்கி ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கவும் டிஆர்பி ரேட்டை அதிகரிக்கவும் கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது.
அந்த வரிசையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடங்களை பிடித்து இருக்கும் சன் டிவி விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி விட்டது என்று கூறலாம்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சீரியல் சுந்தரி ஆகும்.
வானத்தைப்போல சீரியல் அண்ணன் தங்கை பாசத்தை அழகாக எடுத்துக்காட்டுவதால் இதற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
இது போலவே அப்பா மகளுக்கு இடையே இருக்கக்கூடிய உறவை அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் மீராவின் கதையை மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் கண்ணான கண்ணே சீரியல் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
மேலும் எதிர்நீச்சல் சீரியல் ஐந்தாவது இடத்தையும் புதிதாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதனையடுத்து ஏழாவது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் உள்ளது. எட்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியலும், ஒன்பதாவது இடத்தை ஆனந்த ராகம் சீரியலும், பத்தாவது இடத்தை ஈரமான ரோஜா 2 சீரியல்களும் பிடித்துள்ளதால் சன் டிவி விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த வாரம் மெர்சலாக முதல் ஆறு இடங்களையும் கைப்பற்றியுள்ளது என்று கூறலாம்.