பனிமலர் பன்னீர்செல்வம் ( Panimalar Panneerselvam ) ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.
இவருடன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவரை போலவே பனிமலரும் திரைத்துறையில் நுழைந்து கதாநாயகியாக பிரபலமாக வேண்டும் என்று முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் சினிமா வாய்ப்பினை பெறுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்த அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தார்.
மேலும் பல்வேறு முக்கிய சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்களை பற்றி கூட விமர்சனம் செய்து வந்தார், சமீபத்தில் நடிகர் கமலஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பனிமலர் பங்கு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏதோ காரணங்களால் அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இவர் என்ன தான் சினிமா மீது தீவிர ஆர்வமாக இருந்தாலும், இவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மற்றும் இவர் தீவிர பெரியார் ஆதாரவாளர் என்பதால் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் பணி புரியும் தனியார் தொலைக்காட்சியில் அதிகமாக வேலைகள் இல்லாத காரணத்தால் கிடைக்கும் நேரங்களில் தனது சினிமா ஆர்வதிற்காக அவ்வப்போது பனிமலர் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலமாக விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில் வழக்கமாக புகைப்படங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை பதிவேற்றிய படங்களில் சினிமா கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு சேலையில் கவர்ச்சிக் காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சேலை விளம்பரத்திற்காக கடற்கரையில் போட்டோ சூட்டில் இறங்கிய பனிமலர் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவ்வாறு கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் இவர் இதற்கு முன்னர் பெரியார் இப்போது உயிரோடு இருந்தால் அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பதும், MeToo புகாரின் போது பிரபல பத்திரிக்கையின் நிர்வாகத்தில் பணியாற்றியவர் மீது குற்றச்சாட்டை கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.