நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் வழக்கம்போல இலுமினாட்டி குறியீடு இருப்பதாக பாரிசாலன் ஒரு இணையதளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பாரிசாலன் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுதான் இது என்றாலும் கூட இந்த முறையை ஆமா எதுக்கு இத பண்ணிருக்காங்க..? என்று பொதுவான ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்கிறது ஒரு காட்சி.
இலுமினாட்டி என்றாலே 6 என்ற எண்ணுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எண் 6 என்றாலே அது இலுமினாட்டி பற்றி விவரிக்க கூடியது என்று இலுமினாட்டி பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடிய அனைவரது கருத்தகவும் இருக்கிறது.
யூடியூப் சேனலில் தமிழ் சிந்தனையாளர் பேரவை மற்றும் பாரிசாலன் உள்ளிட்டோர் இப்படியான விஷயங்களை பொதுவெளியில் வெளியிட்டு வருகிறார்கள். இப்படியான குறியீடுகள் இருக்கும் படங்களில் வரக்கூடிய காட்சிகள் அல்லது சம்பவங்கள் நிஜத்தில் நடக்கும்.
அவர்கள் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த படங்களின் வாயிலாக கூறுவார்கள். இந்த படத்தில் நாங்கள் பின்னால் செய்யக்கூடிய காரியத்தை கூறியுள்ளோம் என்பதை அடையாளப்படுத்தவே படங்களில் தங்களுக்கான அடையாளங்களை உட்புகுத்தி வருகின்றனர் என்பது இலுமினாட்டி குறித்து ஆராய்ச்சி செய்யக் கூடியவர்களின் கருத்தாக உள்ளது.
அந்த வகையில், விஜய் நடித்த திரைப்படத்தில் நடிகர் விஜய் கோடாரி வைத்திருக்கிறார்.. அவருடைய வீட்டின் சுவற்றில் ஒற்றை கண் போன்று எரியக்கூடிய ஒரு மின்விளக்கு இருக்கிறது.. அவர் கையில் வைத்திருக்க கூடிய விசிறி கூட கோடாரி வடிவிலேயே இருக்கிறது என்று கூறுகிறார்கள் இலுமினாட்டி ஆராய்ச்சியாளர்கள்.
இதெல்லாம் ஏதோ எதேச்சையாக நடந்தது.. இதெல்லாம் ஒரு விஷயமா..? என்று கடந்து விடலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி முக்கியமான ஒரு விஷயம் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது.
ஒரு காட்சியில் டொயோட்டா வேளார் ரக கார் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அந்த காருக்கு ஒரு பக்கம் ரேஞ்சு ரோவர் கார் நிற்கிறது மறு பக்கம் அழகுக்காக வைக்கப்படும் செடி இருக்கிறது.
விஷயம் என்னவென்றால் இந்த காரின் பதிவு எண் ஒரே காட்சியில் இரண்டு என்ன இருக்கிறது முதல் காட்சியில் TN 10 AE 5421 என்று செவ்வக வடிவிலான நம்பர் ப்ளேட் இருக்கிறது. அதே காட்சியில் வேறு ஒரு ஆங்கிளில் அதே காரை காட்டும் போது.. 6666 என்ற எண் கொண்ட சதுர வடிவிலான நம்பர் ப்ளேட் மாற்றப்பட்டிருக்கும்.
சற்று கூர்ந்து கவனித்தால் அந்த காருக்கு ஒரு பக்கம் ரேஞ்சு ரோவர் காரும் மறுப்பக்கம் அழகு செடியும் இருப்பதை அறிய முடியும் எனவே அது அதே கார் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதாவது 6666 என்று இருப்பது போல இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மற்ற காட்சிகள் அவை அனைத்துமே எதேர்ச்சையாக நடந்தவை என்று நம்மால் எளிமையாக புறந்தள்ளிவிட முடியும்.
ஆனால், ஒரே வாகனத்திற்கு எதற்காக இரண்டு பதிவெண்களை படக்குழு வைத்திருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. இந்தப்படத்தில் சொல்லக் கூடிய ஒரு விஷயம் நிஜத்தில் நடக்க போகிறது என்பதை அறிவிப்பதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த மாற்றத்தை செய்திருக்கிறது படக்குழு என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள் இலுமினாட்டி குறித்த ஆராய்ச்சி செய்யக் கூடிய நபர்கள்.
படகுழுவிடன் இருந்து இதற்கு என்ன விளக்கம் வரப்போகிறது..? நிஜமாகவே விளக்கம் கொடுக்குமா..? அல்லது இதற்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டுமா..? என்று வழக்கம் போல கடந்து சென்று விடுவார்களா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிகில் திரைப்படத்திலும் இலுமிநாட்டி குறியீடு இருந்தது என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லன் நடிகர் விஜய் கை குலுக்கியவுடன் சானிட்டைசர் போட்டு கையை சுத்தப்படுத்துவார். அதன் பிறகு நாடே சானிட்டைசர் போட்டுகையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.