வாரிசு : சென்னையில் உள்ள பிரபல திரையங்கம் ஒன்றில் விஜய் ரசிகர்கள் தியேட்டரின் கண்ணாடியை உடைத்து சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகி இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்று வெளியாவதால் நடிகர் விஜயின் திரைப்படம் வரும் சனிக்கிழமை அன்று திரையிடப்படும் என்று தெரிகிறது.
அதிகாலை 3 மணி முதல் இந்த படத்திற்கான சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கத்தில் காட்சி தொடங்கும் முன்பே வெளியே காத்திருந்த விஜய் ரசிகர்கள் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட கடுப்பின் காரணமாக கண்ணாடியை உடைத்து கொண்டு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் பொழுது இப்படி திரையரங்குகள் சேதப்படுத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மேலும் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் படத்தை பார்க்க மட்டுமே பணம் செலுத்துகிறார்கள் தவிர திரையரங்குகளில் உள்ள பொருட்களை உடைப்பதற்கு அல்ல.
இப்படி திரையரங்குகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் ரசிகர்களிடம் என்ன சொல்வது..? என்று புலம்பி வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இந்த வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.