நடிகை திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். மேலும் மணமகன் யார் என்ற விபரமும் இணைய வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இது உண்மையா..? அல்லது வதந்தியா..? என்ற குழப்பத்திலும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சின்ன திரையில் முன்னணி தொகுப்பாளனியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிkஐ திவ்யதர்ஷினி. பல ரசிகர்களின் நெருக்கமான ஒரு தொகுப்பாளினி என்று கூறலாம்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய மீடியா பயணத்தை தொகுப்பாளினியாக தொடங்கிய இவர் 2023 தற்போது வரை தன்னுடைய தொகுப்பாளனி பணியை செய்து வருகிறார். தொகுப்பாளனி என்று ஒரு வார்த்தையை சொன்னாலே அனைவரின் நினைவுக்கும் வரும் ஒரு பெயர் என்றால் அது டிடி என்ற திவ்யதர்ஷினி தான்.
இடையில் தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை திவ்யதர்ஷினி திருமணம் செய்து கொண்ட அடுத்த அடுத்த சில மாதங்களிலேயே விவாகரத்தும் பெற்றார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய நண்பரை திருமணம் செய்தார் தொலைக்காட்சியில் அவருடைய திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற வைபவங்கள் கொண்டாடப்பட்டது.
ஆனால் விவாகரத்து என்று வந்து நிற்கிறாரே..?!!? என்ன பிரச்சனை..? என்று பலரும் வியந்து போனார்கள். ஆனால் இவர்களுடைய விவாகரத்துக்கு இதுதான் காரணம் என்று எந்த ஒரு காரணமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியே வந்தது கிடையாது.
நீண்ட நாள் நண்பரும் உதவி இயக்குனருமாக இருந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றார்.
அதன் பிறகு தனிமையில் தன்னுடைய பணிகளை செய்து கொண்டு சுதந்திர பறவையாக சுற்றி வந்த நடிகை திவ்யதர்ஷினி தற்போது திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுகிறார் என்று கூறப்படுகிறது.
இவருடைய குடும்ப நண்பரும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருமான ஒருவரைத்தான் நடிகை திவ்யதர்ஷினிக்கு இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளனர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்று கூட இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால். இந்த தகவல் கடந்து இரண்டு வாரங்களாக இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திவ்யதர்ஷினி தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் வெளியாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை திவ்யதர்ஷினி இரண்டாவது திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவரையும் போல சந்தோஷமாக இருந்து கொண்டு ரசிகர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்ற தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.