“குளிக்கும் போது அந்த தப்பு பண்ணிருக்கேன்…” – கூச்சமே இல்லாமல் கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அவற்றை நம்முடைய தளத்திலும் கூட பார்த்து இருந்தோம்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றியம் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷிடம் உங்களுடைய அழகின் ரகசியம் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக அனைத்து நடிகைகளிடமும் எழுப்பப்படும் கேள்விதான் இது.. என்றாலும் கூட.. அப்படி கேட்கும் பொழுது பல நடிகைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் சிரித்த முகத்துடன் இருந்தால் போதும் இதுதான் என்னுடைய அழகின் ரகசியம் என்று ஏதாவது ஒரு மழுப்பலான காரணத்தை சொல்லிவிட்டு நழுவி விடுவார்கள்.

ஆனால், சில நடிகைகள் மட்டுமே நின்று என்ன காரணம் என்ன விஷயம்..? எப்படி இருக்க வேண்டும்..? உள்ளிட்ட ஆலோசனைகளை தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கு கொடுக்கும் விதமாக நடந்து கொள்வார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அழகு மற்றும் அதனை பராமரிக்கும் விதம் குறித்த சில விஷயங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.  அவர் கூறியதாவது, அழகை பராமரிப்பதில் தண்ணீர் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.

அதாவது நாள் முழுதும் உடலுக்கு தேவையான தண்ணீரை பருக வேண்டும். உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத பொழுது உடனடியாக நம்முடைய தோல் மீது அதற்கு உண்டான எதிர்வினைகளை பார்க்க முடியும்.

எனவே தாகம் எடுக்கும் பொழுது கண்டிப்பாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். சிலர் பலபேர் வேலைப்பளு காரணமாக தாகம் எடுத்தால் கூட அதனை கண்டு கொள்ளாமல் வேலையில் மும்முறமாக இருப்பதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் தாகம் எடுக்கும் பொழுது தாகம் தீரும் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் இது நம்முடைய சருமத்திற்கும் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது என கூறி இருக்கிறார்.

மேலும் அழகுக்காக வேதிப்பொருட்கள் கலந்த எந்த ஒரு அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தாதீர்கள். இயற்கையான மற்றும் ஆரோக்கியமான அழகு சாதன பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

நான் அதிக நேரங்களில் ஆரஞ்சு பழத்தினால் ஆன பேஸ் மாஸ்க்கை பயன்படுத்துகிறேன். இது என்னுடைய முகம் பளபளப்பாக இருப்பதற்கு உதவுகிறது என கூறியிருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு முறை நீங்கள் மேக்கப் போட்ட பிறகு அதனை சுத்தமாக கழுவுவது அவசியம். அதன் பிறகு முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும் விதமாக ஆர்கானிக் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். இதனை நான் தவறாமல் செய்து வருகிறேன்.

மேலும் குளிக்கும் பொழுது நான் சோப்பு பயன்படுத்துவது கிடையாது. கடலை மாவு.. பாசிப்பயிறு மாவு.. சில நேரங்களில் பாதாம் மாவு உள்ளிட்டவற்றை தான் பயன்படுத்துகிறேன். இது உடலுக்கும் அழகுக்கும் மிகவும் உகந்ததாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்

ஆனால் சிறுவயதில் குளிக்கும் போது சோப்பு போட்டு குளிக்கும் தப்பை செய்து இருக்கிறேன். ஆனால், தற்பொழுது அதனை செய்வதில்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …