நடிகை நயன்தாராவின் மார்க்கெட் திருமணத்திற்கு பிறகு உல்டாவாக மாறியிருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசு எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் இரு துருவங்கள் என்று அழைக்கப்படும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஒரே நாளில் படத்தை வெளியிட்டு விட்டு சரியான வசூலை எட்ட முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பட்டன அதிலும் குறிப்பாக இமைக்கா நொடிகள், மாயா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகர் நயன்தாராவின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு வெளியாகின.
இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டது. ஒரு திரைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையரங்க உரிமையாளர்களையும் திருப்தி படுத்த வேண்டும். அப்போதுதான் அது வெற்றிப்படம் என கருத முடியும்.
முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தி விடும். ஆனால் திரையரங்க உரிமையாளர்களை திருப்திபடுத்தாது. அந்த வகையில் பல முன்னணி ஹீரோயின் படங்களை பார்த்திருக்கிறோம். ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.. படம் வெற்றி படம் என்பார்கள்.. ஆனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்ன கிடைத்தது என்று கேட்டால் ஒன்றுமே இருக்காது.. நட்டமே மிஞ்சியிருக்கும்.
அப்படியான படங்கள் தோல்வி படங்களாக தான் பார்க்கப்படும். ஆனால், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் இவருடைய லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை காலி செய்யும் அளவுக்கு இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
குறிப்பாக O2, காட் ஃபாதர், கோல்டு, கனெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகை நயன்தாராவிற்கு இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் இவருடைய மார்க்கெட் சரிந்து இருக்கிறது எனவே நடிகை நயன்தாராவின் திரைப்பயணத்தில் ஒரு சுனக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
நடிகர் விஜய்யின் பிகில், நடிகர் அஜித்தின் விசுவாசம், நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திரைப்பட வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்பொழுது தொடர்ந்து தன்னுடைய படங்கள் தோல்வி அடைவதால் மீண்டும் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
மட்டுமில்லாமல் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாராவிற்கு தற்பொழுது ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் வாய்ப்பு கிடைப்பது இல்லையா..? அப்படியான படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்.. என்பது கூடுதல் செய்தி.