பழம்பெரும் கால்சிய நடிகையான ஜமுனா வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு சுமார் 86 வயதாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்கள் விரும்பிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.
86 வயதை தொட்டுவிட்ட இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு மோசம் அடைந்ததை அடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் இவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.
இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்ற நிலையில் இவரின் மரணம் தற்போது திரை உலகில் இருப்போர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் நடிகர் கமலுக்கு தாயாராக மிகச் சிறப்பான முறையில் நடித்திருப்பார்.
மேலும் இவர் மிஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பழைய படங்களில் நடித்தவர். இதில் தங்கமலை ரகசியம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து மிக நல்ல புகழை பெற்றிருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு 1999 இல் தமிழக அரசு எம்ஜிஆர் விருதினை வழங்கியது. இவரின் மறைவு தெலுங்கு திரை உலகில் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இதனை அடுத்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தனது 16 வயது முதற்கொண்டு நடிக்க தொடங்கியவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் களமிறங்கியவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் பிறகு பாஜகவுக்கும் மாறினார்.
மேலும் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் இரண்டு முறை தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறார். இதனை அடுத்து தெலுங்கு பிரபலமான மகேஷ் பாபு, வம்சி சேகர் உள்ளிட்டோர் ஜமுனாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை எடுத்து தெலுங்கு திரை உலகில் இருப்பவர்கள் அனைவரும் அவரது மகன் மற்றும் மகள் மகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருப்பது ஒரு மட்டுமல்லாமல் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.