மலையாள படங்களில் நடித்து வந்த இனியா ( Ineya ), ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ‘அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற துக்கடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் வந்த வாகை சூடவா படம் இனியாவுக்கு ஒரு நல்ல வரவேற்பு அமைந்தது.
வழக்கமாக மலையாள நாயகிகள் வந்த புதிதிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள்.ஆனால், தளுக்கு மொழுக்கு என வாட்ட சாட்டமாக இருக்கும் இனியாவுக்கு அப்படியே நேர் எதிராக அமைந்து விட்டது.
படத்திற்கு படம் தனது மட்டமான கதை தேர்வினால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனார்.இருந்தாலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
தற்போது, விலங்கு என்ற வெப் சீரிஸ் ஒன்றில் படுசூடான காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்துள்ளார். இந்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.