நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடமையான விமர்சனங்களை பெற்ற போதும் தொடர்ந்து விடுமுறை நாள் மற்றும் குடும்பப்பங்காக இருக்கும் திரைக்கதை மட்டுமில்லாமல் நடிகர் விஜய் என இருக்கும் குடும்ப ரசிகர்கள் ஆகிய ஒரு ஆதரவுடன் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது என்பது தான் உண்மை.
ஆனால், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து விட்டது என்று படக்குழு சார்பில் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பல வகையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பிரபல சினிமா விமர்சகரும் சர்ச்சைக்குரிய யூடியூப் வருமான ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் இது உலக மகா உருட்டு என்று பதிவு செய்திருக்கிறார்.
எதன் அடிப்படையில் இவர் எப்படி பதிவு செய்தார் என்று எந்த விபரமும் தெரியவில்லை. படத்தை தயாரித்த படக்குழுவே 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று பொதுவெளியில் அறிவிக்கும் போது சினிமா விமர்சகர் ஒருவர் இது உலக மகா உருட்டு என்று கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மேலும் வாரிசு திரைப்படத்தின் ஓட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இப்போது வசூல் பற்றிய தகவலை வெளியிட வேண்டியது அவசியம் என்ன என்று பொதுவான சினிமா ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
துணிவு படத்துடன் மோதிய வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வி படமாக பார்க்கப்பட்டது. ஆனால், இது தோல்வி படம் அல்ல வெற்றி படம் என நிரூபிக்கவே இப்படியான தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
மறுபக்கம் வாரிசு திரைப்படம் வெளியான அதே நாளில் வெளியான துணிவு திரைப்படமும் இதே அளவு வசூலை பெற்றிருக்கிறது. என்றாலும் கூட துணிவு படத்தின் படக்குழு இதனை இந்த வெற்றியை கொண்டாடவோ அல்லது இப்படியான வசூல் அறிவிக்கைகளை வெளியிடவோ செய்யவில்லை.
ஆனால், வாரிசு திரைப்பட குழுவினர் மட்டும் எதற்காக இப்படி முடிந்து போன கல்யாணத்துக்கு மோளம் அடித்து வருகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் கடந்த இரண்டு தினங்களாக இணைய பக்கங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
Summary in English : Movie critic Blue Sattai Maran has recently sparked a controversy by stating that the news that Varisu’s latest film has collected 300 crores is false. This statement was made in response to the production house’s declaration of success. This controversial statement is now being discussed by various media outlets and fans of the movie industry. It remains to be seen what further developments will come out of this story.