” ஆண்களே கவலையே வேண்டாம் இனி உங்கள்..!” – தாடி, மீசை வேகமாக வளர சூப்பர் டிப்ஸ் இதோ..!!

வயதானாலும் எங்களுக்கு இன்னும் தாடியும், மீசையும் வேகமாக வளரவில்லை. அட வளந்த சுவடு கூட தெரியவில்லை என்று கவலைப்படும் இளசுகள் இனி அந்த கவலையிலிருந்து விடுதலை ஆகும் விதத்தில் கீழே உள்ள குறிப்புக்களை ஃபாலோ செய்வதன் மூலம் உங்களுக்கு மட மடவென மீசை முளைத்து தாடியும் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த டிப்ஸை நீங்கள் தினமும் கண்டிப்பாக ஃபாலோ செய்து வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும்.

👌. ஆமணக்கு எண்ணையை மீசை மற்றும் தாடி பகுதிகளில் தடவி வருவதின் மூலம் உங்களுக்கு மீசை, தாடி மிக விரைவில் வளரும். அதாவது நீங்கள் உறங்குவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின் அந்தத் தண்ணீரை முகத்தில் ஆவியாக பிடிக்க வேண்டும்.

 அவ்வாறு பிடிப்பதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய சருமத்துளைகள் ஓபன் ஆகிவிடு.ம் அதனை அடுத்து ஆமணக்கு எண்ணையை தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்வதின் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

👌. கருஞ்சீரகம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியு.ம் இந்த கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை இரவு உறங்கும் போது முகத்தில் நீராவியைப் பிடித்து விட்டு பின் காட்டன் துணிகளால் சுத்தம் செய்த பிறகு மீசை, தாடி வளரும் இடத்தில் எண்ணெயை நன்கு தேய்த்து விட்டு பின் காலை குளிர்ந்த நீரில் கழுவவும் தொடர்ந்து செய்வதின் மூலமும் உங்களுக்கு விரைவில் தாடி மீசை வளரும்.

👌. பொதுவாகவே விளக்கெண்ணைக்கு அதிக அளவு முடி  வளர்ச்சியை தூண்டுகின்ற சக்தியுள்ளது. எனவே இரவு தூங்கும் முன்பு உங்கள் முகத்தை ஆவி பிடித்து நன்கு துடைத்த பின்பு எந்த விளக்கெண்ணையை தாடி மீசை வளரக்கூடிய பகுதிகளில் அழுத்தி தேய்த்து விடவும். பின் மறுநாள் குளிர்ந்த நீரில் கழுவி விட்டால் போதுமானது உங்களுக்கு விரைவில் டாடி மீசை வளரும்.

👌. சின்ன வெங்காயத்தை சாறெடுத்து தாடி மற்றும் மீசை உள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இல்லை என்றால் எந்த சாரோடு தேங்காய் எண்ணெயோ ஆலிவ் எண்ணெய்யோ கலந்து வைட்டமின் ஈ மாத்திரை ஒன்றை போட்டு நன்றாக கலக்கி அந்த பகுதியில் தடவி வர விரைவில் தாடி மீசை வளரும்.

👌. சமையலறையில் நாம் பயன்படுத்தும் லவங்க பட்டைகளை சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியில் எலுமிச்சை சாறு கலந்து கொண்டு இந்த பேஸ்ட்டை உங்கள் தாடி, மீசை இருக்கக்கூடிய பகுதிகளில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் இதை கழுவுங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இதை செய்வதின் மூலம் உங்களது தாடி மீசை வளர ஆரம்பிக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam