” சுவையான மட்டை அரிசி அவல் உப்புமா..! ” – வாயை பிளக்க வைக்கும் அளவு இருக்கும் சத்துக்கள்..!!

மட்டை அரிசியில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதோடு பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தை அள்ளித் தரக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. எனினும் வெள்ளை நிற அரிசியை விரும்பி உண்ணக்கூடிய அனைவரும் இந்த  மட்டை அரிசி அவல் உப்புமா  நன்மைகளையும் சத்துக்களையும் தெரிந்து வைத்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

மட்டை அரிசி அவலில் இருக்கும் சத்துக்கள்

1.நார்ச்சத்து

2 வைட்டமின் பி

3.கால்ஷியம்

4.ஜிங்க்

5.இரும்பு சத்து

6.மக்னீசியம்

மட்டை அரிசி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்

1.கால் கிலோ மட்டை அரிசி அவல்

2.சின்ன வெங்காயம் பொடி பொடியாய் நறுக்கியது

3.பச்சை மிளகாய் 4 வரமிளகாய் ஒன்று

4.தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

5.கடுகு ஒரு டீஸ்பூன்

6.உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்

7.பெருங்காயம் சிறிதளவு

8.தக்காளி நான்கு பொடி பொடியாக நறுக்கியது

9.இரண்டு பல் பூண்டு

10.தேவையான அளவு உப்பு

11.கருவேப்பிலை

செய்முறை

முதலில் மட்டை அரிசி அவளை நீரில் குறைந்தது 5 நிமிடம் ஊற விடுங்கள் ஏனெனில் மற்ற அவிலை விட இது கடினமாக காணப்படும். இதன் பிறகு அடுப்பில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான கடுகு உளுத்தம் பருப்பு இவற்றை போட்டு நன்கு வெடிக்க விடவும்.

 இவை வெடிக்க கூடிய சூழ்நிலையில் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.பின் நறுக்கி பூண்டை சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இதனுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனை அடுத்து இதற்கு தேவையான அளவு உப்பு பச்சை மிளகாய் வரமிளகாய் பெருங்காய பொடி  ஆகியவற்றை நன்றாக போட்டு மீண்டும் கிளரவும்.

 பௌலில் ஊற வைத்திருக்கும் அவலை வடிகட்டி அப்படியே இந்த கலவையில் கொட்டி நன்றாக கிளற வேண்டும். அவ்வாறு கிளறுவதற்கு முன்பு தேவையான உப்பினை இதன் மேல் தூவி இளம் தீயில் நன்றாக கிளறுங்கள்.

மேலும் சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கிளறினால் வாசம் கமகமவென்று இப்போதே உண்ண வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடும்.

எனவே தேங்காய் எண்ணெயை விட்டு கிளறிய பிறகு மணத்திற்காக கருவேப்பிலையை கையால் பிய்த்து அப்படியே போடவும்.

 இப்போது சூடான சுவையான அவல் உப்புமா ரெடி இந்த மட்டை அரிசி அவல் உப்புமா, கை குத்தல் அரிசி என்பதால் எண்ணற்ற நன்மைகளை கொண்ட ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய இந்த உப்புமாவை மாலை நேர குறுந்தீனியாக கூட உங்களது குழந்தைகளுக்கு சாப்பிட பழக்கப்படுத்தி விடுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam