சென்னையில் கடந்த 1995 ஆம் ஆண்டு பிறந்த பரத்குமார் சிறு வயதிலேயே பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார் அதனை தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு நைனா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து அவருக்கு தமிழ் தெலுங்கு என அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் கடந்த 26 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான போக்கிரி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை அசினின் தம்பியாக பப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. போக்கிரி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்ட இவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஃபாதர், சித்தி, உமா கார்த்திக் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய படங்களில் எதுவும் நடிக்கவில்லை.
சின்னத்திரையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த மை டியர் பூதம் என்ற சீரியலிலும் அதே 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி என்ற தமிழ் சீரியலிலும் நடித்திருந்தார்.
தன்னுடைய நடிப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார் மாஸ்டர் பரத். குறிப்பாக ரெடி மற்றும் பிந்தாஸ் என்ற இரண்டு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற நந்தி விருது இவருக்கு கிடைத்தது.
அதன் பிறகு மை டியர் பூதம் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் ரசிகர்களின் ரசிகர்களை கவர்ந்ததனால் தமிழ்நாட்டு அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தற்பொழுது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் போக்கிரி படத்தில் நடித்த குட்டி பையனா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.
Summary in English : Actor Bharath has been the talk of the town recently after his photos from the sets of his upcoming movie Pokkir went viral. Fans have been sharing and discussing his recent photos on social media platforms, making him an even bigger star than he already is.