ஊழ்வினையில் இருந்து தப்பிப்பது எப்படி..? – இதை பண்ணுங்க..!

முன் ஜென்ம வினைகளை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டும். இதைத்தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று கூறியிருக்கிறார்கள். எனினும் இந்த நிலையை மாற்றி அமைக்க சில பரிகாரங்களை செய்வது போல் செய்வதின் மூலம் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும் என்று சொல்லலாம்.

இந்த கர்ம வினையில் தெரிந்து செய்தது, தெரியாமல் செய்வது என்று பாவங்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டாலும் உங்களுக்கு ஏற்படக்கூடிய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியாது.

எனவே செய்த பாவங்களுக்கு உரிய தண்டனையை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டும். எனினும் ஈன்ற கர்ம வினை சில பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அவ்வாறு பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்யக் கூடியது.இது வழிபாட்டு முறைகளுக்குள் வருவதில்லை.

 எனவே பரிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட காரிய வெற்றிக்காக நாம் நேரம் பொருள் இவற்றை செலவு செய்து பூஜையில் ஈடுபடுவதாகும். இதன் மூலம் மனிதர்களின் பிரச்சனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், தடைகள், இடையூறுகள் போன்றவை நீங்கும்.

இதற்கு உதாரணமாக வாழை மரத்துக்கு தாலி கட்டி வெட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவற்றை கூறலாம். மேலும் ஹோமத்தின் மூலம் இந்த பிரபஞ்ச சக்தியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பதுதான் இந்த பரிகாரத்தின் முக்கிய நிலையாகும்.

 எனவே இந்த பரிகாரத்தின் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும். பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம், செல்ல வேண்டிய கோயில் போன்றவற்றை நாம் நமது ஜாதகத்தின் மூலம் கனித்து தெரிந்து கொள்ளலாம்.

 மேலும் பரிகாரம் செய்யும் போது தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன காலடி, காவல் தெய்வங்களுக்கு நாம் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரங்களை நீங்கள் உங்கள் சந்திராஷ்டம தினத்தன்று செய்யக்கூடாது.

 உங்களுக்காக பரிகாரம் செய்யும் போது பரிகாரம் செய்யும் கிரகம் ஆட்சி உச்சம் நட்பு பெற்றிருப்பது நல்லது. இந்த பரிகாரத்தில் பல வகைகள் உள்ளது. அதாவது சுய பரிகாரம் செய்தல் விருப்பம் இல்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக பரிகாரம் செய்வது வேத விற்பனர் மந்திரம் சொல்லும் போது அந்த பரிகாரத்திற்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லாத போல உங்கள் மனநிலை இருக்கும் என்றாலும் எண்ண அலைகளை பரவ விட்டு பரிகாரம் செய்து கொள்வது அடங்கும்.

அன்றைய காலத்தில் நமது முன்னோர்கள் எவ்வளவு சிரமம் வந்த போதும் மோட்சம் பெறும் காலம் வரை தர்மத்தை மட்டுமே கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் இன்று நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது.எனவே உரிய பரிகாரங்களை செய்து உன்னத வாழ்க்கையை பெறுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam