நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) 2019ஆம் ஆண்டு இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ‘ஒந்து கதை ஹெல’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நடித்த சில படங்களிலேயே இப்பொழுது மிகப் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ள பிரியங்கா இப்பொழுது சூரியன் முத்தமிட்ட அழகிய க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுடன் இணைந்த டாக்டர், சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக உருவானது.
வழக்கமாக கடத்தலை கதைக் களமாகக் கொண்டு படங்களை எடுக்கும் நெல்சன் டாக்டர் படத்திலும் பெண் குழந்தைகளை கடத்தல் பற்றி எடுத்திருந்தார்.சிவகார்த்திகேயன் இதுவரை தனது காமெடி கவுண்ட்டர்கள் மூலம் மற்றவர்களை டேமேஜ் செய்வார்.
ஆனால் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் பெரிதாக பேசாதவாறு அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். டாக்டர் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனுக்கு இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் பெரிதாக கவர்ந்தது. அதிகமாக கிளாமர் காட்டாமல் மிதமான கிளாமர் காட்டி வரும் இவர் தற்போது அழகு கொஞ்சும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. என்று வர்ணித்து வருகின்றனர்.