இது இருந்தால் மட்டும் தாமரை மலர்ந்து விடுமா..? – முதல்வர் ஸ்டாலின் நறுக் கேள்வி..!

நீர் நிலைகளில் மலரும் பூ தான் தாமரை. ஆனால், அதற்காக எல்லா இடத்திலேயும் தாமரை மலர்ந்து விடாது என பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை பார்ப்போம்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு மு க ஸ்டாலின் அவர்கள் உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தலைப்பில் கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதிலுரைகளை பற்றிய உங்கள் பார்வை என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை. பதிலே சொல்லாமல் மணி கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை நான் மோடியிடம் கற்றுக் கொண்டேன்.

பாஜக ஆட்சியின் மீதும் பிரதமரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்லவே இல்லை. ஆனால் எல்லாவற்றுக்குமே நாட்டு மக்கள் எனக்கு கவசமாக இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்கிறார்.

ஆனால், அதனை மக்கள் சொல்லவில்லை அவராகவே சொல்லிக் கொள்கிறார். சேரு வீசுங்கள் தாமரை மலரும் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நீர் நிலைகளில் வளரக்கூடிய பூதான் தாமரை. அதற்காக தண்ணீர் உள்ள எல்லா இடங்களிலும் வளர்ந்துவிடாது. சேர் இருக்கிற இடமெல்லாம் வளர்ந்து விடாது.

இவ்வாறு வார்த்தை ஜாலங்கள் தான் அவருடைய உரையிலிருந்ததே தவிர பிபிசி ஆவணப்படம் பற்றியோ அதானி விவகாரம் குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து பேசிய அவர் நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் எதை இன்னும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பது குறித்து பிரதமர் வரிசை படுத்தவில்லை.

குறிப்பாக சேது சமுத்திரத் திட்டம் நீட் விலக்கு மாநில உரிமைகளில் ஆளுநரின் தலையீடுகள் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது என எத்தனையோ கேள்விகளை திமுக உறுப்பினர்கள் கேட்டனர்.

ஆனால் பிரதமர் தன்னுடைய உரையில் இவை எதற்குமே பதில் கூறவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமரிடம் பதில் இல்லை என்பது தான் உண்மை எனவும் கூறி இருக்கிறார்.

Summary in English : Tamil Nadu Chief Minister Stalin has been vocal in his criticism of Prime Minister Modi for not addressing the queries raised by Tamil Nadu MPs in the Parliament. He has stated that the central government is not adequately representing the state’s interests and has accused PM Modi of ignoring Tamil Nadu’s concerns. The CM called on the Prime Minister to take action to address the grievances of Tamil Nadu citizens and urged him to respond to their questions in a timely manner.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …