இன்றைய ராசிபலன் 19 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 19 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை.மனிதன் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் அதற்கு அவர் கட்டாயம் இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியம். விதியை மதியால் வென்றவர்கள் பல பேர் நமக்கு முன் உதாரணமாக இருக்கும்போது  விதியை நினைத்து நோகாமல் மதியால் அதை வெற்றி கொள்வதற்கு நம் மனதினை பக்குவமாகவும் தயாராகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

 ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் கட்டாயம் மனிதர்களுக்கு நிகழக்கூடிய செயல்களை முன்கூட்டியே கணித்து ஏற்படும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அருமையான ஜோதிடத்தில் நம்பிக்கையோடு நீங்கள் இருந்தால் கட்டாயம் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களின் எண்ணத்திலும், செயலிலும் இன்று மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். நீங்கள் தியான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மேலும் உங்கள் மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

தொழிலைப் பொறுத்தவரை புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும் இதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பணி புரியும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக அனைத்தும் இருக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் சேமிப்பு திட்டங்களில் நீங்கள் சேர்ந்து பலனை அடையக்கூடிய நாளாக உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று எந்த குழப்பமும் இல்லை மன உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம்

அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ரிஷப ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும் நாள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்கள் பலன்கள் தாமதமாக  கிடைக்கும். அதிக எதிர்பார்ப்புகள் என்று இருக்கக் கூடாது.

தொழிலைப் பொறுத்தவரை உங்கள் பணி கவலையை அடிக்கும் திட்டமிட்டு பணியாற்றுங்கள் இல்லை என்றால் மிகவும் கஷ்டமான சூழ்நிலை ஏற்படலாம். நிதி நிலைமை வளமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே சங்கடங்களை சந்திப்பீர்கள். கூடுதல் செலவு ஏற்படலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நிலையை அக்கறை காட்ட வேண்டும், அதற்காக பண செலவுகளை கட்டாயம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் உங்களுக்கு அது கவலை அளிக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அமைதியான முறையில் நீங்கள் சகஜமாக எதையும் அணுக வேண்டும். பலன்களை இன்று சாதகமாக கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயம் ஆன்மீக ஈடுபாடு இருந்தால் மட்டுமே முடியும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

 பணி புரியும் இடத்தில் பணி சுமை அதிகமாக காணப்படும். எனவே எந்த பணியையும் செய்வதற்கு முன்பு திட்டமிட்டு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். திட்டமிடுதல் மூலம் தான் நீங்கள் வெற்றி பெற முடியும்.

 இன்று நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கவனம் தேவை. ஆரோக்கியமும் சிறந்து இருக்கும் என்று கூற முடியாது.

எனவே நீங்கள் ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும் கண் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை மேற்கொள்ளவும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று அற்புதமான நாள் என்பதால் முன்னேற்றகரமான பலன்கள் உங்களை தேடி வந்து சேரும். நம்பிக்கையுடன் காணப்படும் நீங்கள் எல்லா செயல்களையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். குறைந்த முயற்சியில் நீங்கள் விரைவில் இலக்குகளை எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் இன்று உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை என்று சூப்பராக இருக்கும் பணி புரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்களை போற்றி புகழுவார்கள்.

 ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கக்கூடிய நாள் என்பதால் நீங்கள் உங்கள் திறமான ஆரோக்கியத்தால் அனைத்திலும் வெற்றியடைய முடியும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த கவலையும் வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு ஆக்கபூர்வமான பலன்கள் இன்று கட்டாயம் இல்லை. எனினும் நீங்கள் உங்கள் தைரியத்தையும் மன உறுதியும் அதிகப்படுத்தலாம் என்று நினைத்தாலும் அவை இரண்டுமே இன்று உங்களுக்கு அதிகமாக இருக்காது. உங்களுக்கு உற்சாகமான போக்கு தேவை சிறிய பயணம் மற்றும் மாறுதல் உங்களுக்கு கட்டாயம் நிகழும்.

 பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருப்பதால் நீங்கள் திட்டமிட்டு உங்கள் பணியை செய்ய வேண்டும். நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்தே காணப்படும்.

 அது மட்டுமல்லாமல் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. சுணக்கமான ஆரோக்கியம் நிலவுவதால் உங்கள் கால்களில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தகுந்த சிகிச்சையை உடனே மருத்துவமனைக்குச் சென்று மேற்கொள்ளுங்கள் யோகா செய்து பலனை பெறுங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் அமைந்து இருப்பதால் விவேகத்தோடும், புத்துணர்வோடும் நீங்கள் செயல்படுவீர்கள். கவனமற்ற வார்த்தைகளை பேசி வீண் விவாதங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பேசும் வார்த்தைகளில் அதிக கவனத்தை வைத்துக் கொள்வது அவசியம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வரவு, செலவு இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதால் பண இழப்பை தடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் செலவுகளை குறைக்க கூடிய வழியை யோசித்து கையாள வேண்டும்.

 ஆரோக்கியமும் அவ்வளவு சிறப்பாக இல்லை. பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் பதட்டத்தை குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இறை வழிபாடுகளில் மனதை செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று சாதகமான பலன்கள் உள்ளதால் நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் எதையும் எதிர்கொள்ளலாம். நேர்மறையான எண்ணங்களை உங்கள் மனதில் வளர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பணிபுரியும் இடங்களில் இன்று பணிச்சுமை அதிகமாக இருப்பதால் நீங்கள் செய்யும் பணிகளில் மும்மரம் காட்டுவீர்கள். வேலையில் தவறு நிகழ வாய்ப்பு உள்ளதால் அதிக நேரம் ஒதுக்கி உங்கள் வேலையை செய்யவும்.

மேலும் பணிகள் சிறப்பாக அமைய நீங்கள் கூடுதல் கவனத்தை செலுத்துவது கட்டாயமாகும். நிதி நிலைமையை பொறுத்தவரை போதுமான அளவு வரவு உங்களுக்கு இல்லை என்பதால் பண இழப்பை தடுப்பதற்கு என்ன வழி என்பதை சதுரயமாக யோசித்து செயல்படவும்.

 ஆரோக்கியத்திலும் சுணக்கம் இருக்கக்கூடிய நாள் என்பதால் உங்கள் முதுகு கை, கால்களில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது இந்த வலிகளை நீக்குவதற்கு உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று சிறப்பான நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையுடனும் எதிலும் செயல்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்க சிறப்பான நாளாக இந்த நாள் உள்ளது.

தொழிலைப் பொறுத்தவரை சவாலான பணிகளை கூட மிக எளிதாக முடிக்கக்கூடிய ஆற்றல் இன்று உங்களுக்கு உள்ளது. சிறப்பாக திட்டமிட்டு பணியை செய்வதின் மூலம் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை இன்று பூர்வீக சொத்து மூலம் பணவரவு கிடைக்கும். கணிசமான சேமிப்பு உங்களுக்கு உயரும் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லாததால் ஆற்றலோடு இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்கள் இன்று பொறுமையோடும் நம்பிக்கையோடும் இருந்தால்  இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். உங்கள் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 எனவே நம்பிக்கையோடு எதிலும் செயல்படுங்கள் வெற்றி கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை இன்று பணிகள் அதிக அளவு இருந்தாலும் கவனமாக நீ நீங்கள் பணிபுரிவது மிகவும் அவசியமான ஒன்று. இன்று கட்டாயம் மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது.

 எனவே கவனத்தோடு பணிபுரியவும். நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சராங்கமாக இருக்காது பண பற்றாக்குறை உள்ளதால் நீங்கள் கவனத்தோடு இருக்க வேண்டும்  தேவைக்கு ஏற்ப செலவுகளை செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தில் அசௌவுகரியம் காணப்படுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக தூக்கமின்மை தோல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று சோம்பலும் தேவையில்லாத மனக்குழப்பமும் உங்களுடைய நிலவுவதால் நீங்கள் எந்த ஒரு செயல்களை செய்வதற்கு முன்பு பல தடவை யோசிப்பது நல்லது. நேர்மறையான எண்ணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வது என்று அவசியமான ஒன்றாகும்.

தொழிலை பொருத்தவரை அதிக பணிகள் இருந்தாலும் நீங்கள் உங்கள் பணிகளில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு இன்று உங்களுக்கு இல்லை என்பதால் நீங்கள் சக பணியாளர்களுடன் இணக்கமாக இருக்கவும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பணத்தை பக்குவமாக செலவு செய்ய பழகிக் கொள்ளவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவனம் தேவை ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும் அதிக அக்கறையோடு உங்கள் உடல் நலத்தை பேணிப் பாதுகாக்கவும்.

கும்பம்

கும்பராசி நேயர்களுக்கு துரதிஷ்டம் காரணமாக மதிப்புமிக்க வாய்ப்புகளை பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகும். கடைசி நிமிடத்தில் நீங்கள் நல்ல நல்ல வாய்ப்புகளை இழக்க கூடிய சூழ்நிலை இன்று உள்ளது. இது உங்கள் மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்தித் தரும்.

 தொழிலைப் பொறுத்தவரை முறையாக திட்டமிட்டு பணியை செய்தால் மட்டுமே பணியில் பிழையில்லாமல் நீங்கள் அந்தப் பணியை சிறப்பாக செய்ய முடியும். எனவே திட்டமிடுதல் மிகவும் அவசியம் அதைவிட செய்யும் பணியில் கவனத்தோடு இருங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரிக்கும் நாள் இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடினமாக இருக்கும். எனவே பணத்தை செலவு செய்வதற்கு முன்பு யோசித்து செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மிதமான ஆரோக்கியம் மட்டுமே இன்று இருப்பதால் நீங்கள் சற்று கவனத்தை உங்கள் ஆரோக்கியத்தில் செலுத்த வேண்டும். இருமல், சளி தொல்லை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு என்று சாதகமான நாளாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பதன் மூலம் அதில் நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியில் உங்கள் செயல் திறனை அபரிமிதமாக காட்டுவதன் மூலம் திருப்திகரமான நாளாக பணியை பொறுத்தவரை இந்த நாள் அமைந்துள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும், செலவும் சிறப்பாக இருக்கும். சிறிய அளவு சேமிப்பு உயரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன ஆற்றல் மிகுதியாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனவே அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …