வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை அப்படியே வீசி விடுவோம். அந்த தோலை நீங்கள் இப்படி எல்லாம் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்கள் சரும பராமரிப்பு படு சூப்பராக இருக்கும். உங்கள் மேனி பளிச்சென்று மின்னுவதற்கு இந்த வாழைப்பழத் தோலா காரணம் என்று கூறினால் அனைவரும் அதிர்ந்து போவார்கள்.
அந்த அளவு எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத் தோலை கொண்டு உங்கள் முகத்தை எப்படி பிளிச் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிளிச் செய்ய தேவையான பொருட்கள்
1.வாழைப்பழத் தோல் ஒன்று
2.ஒரு சிட்டிகை சர்க்கரை
3.ஓட்ஸ் இரண்டு டேபிள் ஸ்பூன்
4.பால் சிறிதளவு
மேற்கூறிய பொருட்களான வாழைப்பழத் தோல் ஒரு சிட்டிகை சர்க்கரை ஓட்ஸ் மூன்றையும் நீங்கள் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த இந்த கலவையை பாலில் பேஸ்ட் பக்குவத்தில் கலந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து இந்த கலவையை உங்கள் முகத்தில் நன்கு பூசி விடவும்.
பூசிய இந்தக் கலவை ஊறும் வரை காத்திருக்கவும். இது நன்கு காய்ந்த பின்பு குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். முகத்தில் இருக்கும் அழுக்கு நீங்கி பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பீர்கள்.
மேலும் உங்களது முகத்தில் இருக்கும் முகச்சுருக்கம் மற்றும் வறட்சி நீங்க இதே வாழைப்பழத் தோலை நன்கு அரைத்து பாலாடையோடு கலந்து பூசி விட வேண்டும். 20 நிமிடங்கள் காத்திருந்து இது உலர்ந்த பின்பு நீங்கள் மீண்டும் முகத்தை கழுவினால் முகச்சுருக்கம் நீங்கி வறட்சியும் மாறிவிடும்.
எண்ணெய் வழியும் சருமத்தோடு இருப்பவர்கள் வாழைப்பழ தோல் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் அரைத்து தடவி பத்து நிமிடம் வரை இந்த இதை அப்படியே வைத்திருந்தால் நன்கு உலர்ந்து விடும். இது உலர்ந்த பின் இளம் சூட்டில் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
இதனைத் தொடர்ந்து நீங்கள் செய்யும் போது உங்கள் எண்ணெய் சருமம் மாறி இயல்பான சருமமாக மாறிவிடும்.
மேலும் முகத்தில் கருவளையம் இருக்கிறதே என்ற கவலை இனி வேண்டாம். இதே வாழைப்பழத் தோலை நீங்கள் அரைத்து அதோடு கற்றாழை ஜெல்லியை கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து விடுங்கள்.
ஐந்து நிமிடம் காத்திருந்து பின்பு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கருப்பு திட்டுக்கள் மற்றும் கருவளையம் மாறிவிடும்.