இன்றைய ராசிபலன் 20 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 20 பிப்ரவரி   2023 திங்கட்கிழமை. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையோடும் நவக்கிரகங்களின் தாக்கம் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. இது மனிதனின் ஆக்கப்பூர்வமான செயலுக்கும் அழிவுபூர்வமான நிகழ்வுகளுக்கும் இந்த நவகிரகங்களின் தொடர்பு மற்றும் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது என்றால் அனைவரும் அதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கின்ற அபரிமிதமான சக்தியும் இதில் அடங்கும் என்பது உண்மையான விஷயமே.

 ஒவ்வொரு கோள்களின் தன்மைக்கு ஏற்றபடி தான் ஒவ்வொரு மனிதனின் வெற்றி, தோல்வி அமைகிறது. எனவே அந்த கோள்களின் நிலை எப்படி உள்ளது. அதன் பார்வையின் தன்மை எப்படி உள்ளது என்பதை ஜோதிடத்தின் மூலம் கணித்து அதன் சுப மற்றும் அசுப பலன்களுக்கு தக்க பரிகாரங்களை செய்து விடுவதின் மூலம் அவற்றின் தாக்கங்களிடத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு அடுத்த நிலையை சிறப்பாக செயல்படுத்தக் கூடிய வகையில் நமக்கு சில ஆலோசனைகளை கொடுக்கக்கூடிய ஜோதிடக் கலை மிகவும் அற்புதமானது. அந்த வரிசையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று சிறப்பான பலன்கள் அதிகமாக கொட்டக்கூடிய நாள் என்பதால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். நீங்கள் முக்கிய முடிவுகளை இன்று தாராளமாக எடுக்கலாம். உங்கள் செயல்களில் அதிக அளவு உறுதி காணப்படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் சக பணியாளர்களுடன் நட்புடன் பழகுவீர்கள். மேல் அதிகாரிகளின் நன்மதிப்பு பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் ஸ்தானம் இன்று படு சூப்பராக உள்ளது.

 நிதி நிலைமை பொறுத்த வரை திறமான நிலைமை நீடிப்பதால் உங்கள் பணப்பெட்டியில் பணம் வந்து குவியும். சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. கடவுள் அருளால் என்று எல்லாம் ஜெயமாக உங்களுக்கு முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று சாதகமான நாள் என்பதால் உங்கள் இலக்குகளை விரைவாக நீங்கள் முடிக்கலாம். எதிலும் ஆர்வத்தோடு இருக்கக்கூடிய நீங்கள் இந்த நாளை முழுமையாக பயன்படுத்தி வெற்றிகளை அதிகமாக  உங்களதாக மாற்றி விடுவீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. புதிய புதிய வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். உங்களுக்கு இது மகிழ்ச்சியை தருவதோடு அந்தப் பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றலும் உங்களுக்குள் இருக்கும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை ஸ்திர தன்மை இருப்பதால் பணப்புழக்கத்திற்கு குறைவே இல்லை. சேமிப்பு கணிசமான அளவு உயரும் பணத்தை பயனுள்ள வழியில் நீங்கள் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருப்பதால் தேவ ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மிதுன ராசி நேயர்கள் இன்று எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்களுக்கு பலன் கிடைக்காது. எனவே தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்வதோடு ஆன்மீக ஈடுபாடு இருந்தால் மட்டுமே இன்றைய நாள் சிறப்பான நாளாக உங்களுக்கு அமையும். கோயிலுக்கு செல்லுதல் மூலம் ஆறுதலை நீங்கள் அடையலாம். முக்கிய முடிவுகளை இன்று தயவு செய்து நீங்கள் எடுக்க வேண்டாம்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். பணி சுமை அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் உங்களால் பணிகளை செய்து முடிக்க முடியாது. எனவே பணியில் கவனத்தை செலுத்தவும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை அதிக செலவுகள் ஏற்படும் நாள் என்பதால் உங்கள் பொறுப்புக்களை உணர்ந்து பணத்தை செலவு செய்யுங்கள். இல்லையெனில் பணம் தண்ணீரை போல் கரைந்து போகும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கை, கால், முட்டி வலிகள் ஏற்பட  வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் சற்று கவனத்தை செலுத்துவது நல்லது.

கடகம்

திட்டங்கள் பல போட்டு அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடிய கடக ராசி நேயர்களுக்கு இன்று எதிர்பார்த்தபடி நாள் இல்லை என்பதால் அதிர்ஷ்டத்தை நீங்கள் நம்ப முடியாது. சுய முயற்சியை மட்டும் நம்புங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை என்று நீங்கள் தள்ளிப் போடுங்கள்.

 தொழிலை பொறுத்தவரை பணியிடத்தை இறுக்கமான சூழ்நிலை நிலவுவதால் உங்களுக்கு ஓய்வு என்பதே கிடைக்காது. சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கட்டாயமாக நீங்கள் திட்டமிட்டு தான் பணியாற்ற வேண்டும். எதிலும் கவனத்தை கையாளுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். கூடுதல் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இந்த நாள் இருப்பதால் உங்களுக்கு கவலையே மிஞ்சும். ஆரோக்கியத்தில் அமைதியின்மை இருப்பதால் பதட்டமான சூழ்நிலை உங்கள் ஆரோக்கியத்தில் உள்ளது. எனவே கவனமாக உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருப்பதால் வளர்ச்சி அதிகரித்து இருக்கும். கடினமான பணிகளை கூட இன்று எளிதாக முடிப்பீர்கள். உடல் மற்றும் மன தைரியத்தோடு இருக்கும் நீங்கள் இன்று எல்லாவற்றையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பணி செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு தேவையை விட அதிகமாக காணப்படும்.

சேமிப்பு கணிசமாக உயரக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது அது போலவே ஆரோக்கியமும் சீரும் சிறப்புமாக ஆற்றலோடு சிறப்பாக இருக்கும்.

கன்னி

 வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய கன்னி ராசி நேயர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான பலன்களை தரக்கூடிய நாள் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் வலிமை காரணமாக எல்லா முயற்சிகளிலும் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 மூத்தவர்களின் ஆதரவு அதிகளவு இருப்பதால் நீங்கள் சிறப்பான நிலையை அடைவீர்கள். தொழிலைப் பொறுத்தவரை சிறந்த முறையில் பணியாற்றி பாராட்டுகளை பெறுவீர்கள். அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை அதிர்ஷ்டம் உள்ள நாள் என்பதால் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு சேமிப்பை உயர்த்தி விடுவீர்கள். பணம் தாராளமாக இன்று உங்களிடம் இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆற்றல்மிக்க நாள் என்பதால் ஆரோக்கியத்தில் சுணக்கம் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

துலாம்

 அற்புதமான நாளாக இன்று இருக்கும் என்று எதிர்பார்த்தால் சுணக்கமான மந்தமான நாளாக இன்று துலாம் ராசி நேயர்களுக்கு உள்ளதால் பாதகமான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதால் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து செய்வது மிகவும் நல்லது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபாடுகளை அதிகளவு இன்று செலுத்துவீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை கவனக்குறைவு காரணமாக பணிகள் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் திட்டமிட்டு கவனமாக எதையும் செய்ய வேண்டும்.

நிதி நிலைமையில் சற்று தளர்வு காணப்படுவதால் இன்று அது சம்பந்தமாக உங்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை குறைக்க முயற்சி செய்து பாருங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி தீவிரமாக இருக்கும். கடவுளை நம்பி தியானத்தை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தையும் பணவரவையும் மேம்படுத்தி கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி  நேயர்களே இன்று சாதகமான நாளாக உங்களுக்கு இல்லை. பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடிய நாள் என்பதால் எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். வீட்டை புதுப்பிப்பதற்காக இன்று பண செலவுகள் ஏற்படலாம்.

 தொழிலைப் பொறுத்தவரை சக பணியாளர் உடன் நல்லுறவோடு உங்களால் இருக்க முடியாது. இதனால் பிரச்சனைகள் ஏற்படும். பணியில் கவனம் தேவை. நிதிநிலைமையை பொறுத்தவரை பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஜாக்கிரதையாக எதையும் கையாள வேண்டும்.

 தாயாரின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதால் அதற்காக பண செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். உங்களது ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று வளர்ச்சி அபரிமிதமாக ஏற்படக்கூடிய நாள் என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி மற்றும் வளர்ச்சி இருக்கும். இந்த நாளில் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதின் மூலம் நிறைய சாதிக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை சுமூகமாக பணிகள் நடக்கக்கூடிய நாள் .மேலும் உங்கள் திறமை உங்கள் தொழிலில் வெளிப்படும். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு இன்று கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று ஊக்கத்தொகை கிடைக்கும். சேமிப்பு உயரும் பணப்புழக்கம் நன்றாகவே இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த ஒரு குறையும் இல்லை நீண்ட ஆயுளோடு நீங்கள் இருப்பீர்கள்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அவ்வளவு பலன்களை கொடுக்கக்கூடிய நாளாக இல்லை.  யாரோடு பேசும் போதும் நீங்கள் கவனமாக உங்கள் வார்த்தைகளை கையாள வேண்டும். நண்பர்களை சந்திப்பதை இன்று தவிர்த்து விடுங்கள். இறைவழிபாட்டில் மனதை செலுத்துங்கள் ஆறுதல் கிடைக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை அதிக பணிகள் காரணமாக உங்களுக்கு பணிகளில் சுணக்கம் ஏற்படும்.குறஞ நேரத்தில் எந்த ஒரு பணியும் நீங்கள் முடிக்க முடியாது. என்பதால் திறமையுடனும் கவனத்துடனும் செயல்படுவது அவசியம்.

 நிலைமையை பொறுத்தவரை பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பண விஷயத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மந்தமான நாளாக இருப்பதால் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும் என்பதை உறுதியாக கொள்ளுங்கள். கடினமான சூழ்நிலையை இன்று சந்திக்க நேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் எதையும் கவனத்தோடு அணுக வேண்டும்.

 முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். தொழில் நிலையை பொறுத்தவரை இன்று பயம் காரணமாக பதட்டமான சூழ்நிலை பணியிடத்தில் இருக்கும் அமைதியாக இருந்து திறமையுடன் உங்கள் பணியை செயல் படுத்துங்கள்.

நிதிநிலைமையை பொறுத்தவரை வீட்டை புதுப்பிக்க அல்லது புனர் அமைப்பதற்காக நீங்கள் பண செலவு செய்ய வேண்டும். சேமிப்பு நிலை உயர குறைந்த வாய்ப்பே இல்லை. ஆரோக்கியத்தை பொறுத்தவரை அசவுரியங்களை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். தொடைவலி வந்து போகும். வலி அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

மீனம்

எல்லோருக்கு உதவி செய்யக்கூடிய குணமடைத்த மீன ராசிய நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இல்லை. குழப்பமான மனநிலை இருக்கும். உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூற முடியாது பிறளுடன் பேசும்போது அதிக கவனத்தோடு பேசுவது அவசியம்.

 தொழிலைப் பொறுத்தவரை தேவையற்ற பயணங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பணியில் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நீங்கள் அதிக அளவு எதிர்பார்க்க முடியாது.

 நிதி நிலைமை பொறுத்த வரை பண பற்றாக்குறையால் உங்களுக்கு கவலை ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைப்பீர்கள். பண இழப்புக்கான வாய்ப்பு இருப்பதால் பார்த்து கவனத்தோடு செயல்படவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பற்றி கவலை ஏற்படும்.மேலும் உங்கள் துணையின் உடல் நலனுக்காக பண செலவு செய்ய வேண்டி இருக்கும் எனவே எச்சரிக்கையோடு இருங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …