Tuesday, September 24

இன்றைய ராசிபலன் 22 பிப்ரவரி 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 22 பிப்ரவரி   2023 புதன்கிழமை. வாழ்க்கையில் எண்ணற்ற  பலன்களைத் பெற வேண்டும் என்று நினைக்கக் கூடிய அனைவரும் அவரது ஜாதகத்தில் இருக்கும் நவ கோள்களின்  பார்வைக்கு ஏற்ப பலாபலன்களை பெறுவார்கள். அப்படி அவர்கள் நல்ல பலன்களையும் தீய பலன்களையும் மாறி மாறி பெறக்கூடிய சூழ்நிலையில் எந்த கிரகம் உச்சத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தின் ஆளுமை அவர்களின் ஜாதகத்தில் மூலம் அவர்களுக்கு சுப அசுப பலன்கள் ஏற்படுகிறது. மேலும் நீச்சத்தில் இருக்கும் கோள்களின் மூலம் அந்த அளவுக்கு அவர்களுக்கு பலன்கள் கிடைக்காது.

எனவே நீச்சமாக இருக்கக்கூடிய கோள்களை வலிமைப்படுத்த பரிகாரங்களையும் அதற்கு உரிய ராசிக்கல் மோதிரங்களையும் போட்டு அவற்றின் சக்தியை அதிகரித்து விடலாம். எனவே ஜாதகத்தை கொண்டு உங்களது சுப அசுப பலன்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு தக்கபடி நீங்கள் நடக்க முடியும்.அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

எதிலும் வெற்றி காண வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கக்கூடிய மேஷ ராசி நேயர்களுக்கு, இன்றைய நாள் சாதகமான நாளாக இல்லை. எதையோ இழந்து இருப்பது போன்ற உணர்வு உங்களிடம் அதிகரித்து காணப்படும். எதிலும் பொறுமையை கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி செய்யும் இடத்தில் திட்டமிட்டு உங்கள் பணிகளை செய்வதோடு கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. அப்போதுதான் நீங்கள் உங்கள் பணிகளை விரைவாக செய்து முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிதி வளர்ச்சி இன்று சற்று குறைவாகவே உள்ளதால் பணத்தை செலவு செய்வதில் கவனத்தை செலுத்தவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தூக்கமின்மை பதட்டம் காரணமாக கை, கால்களில் வலிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ரிஷபம்

 பொன்னான நாளாக இந்த நாள் ரிஷப ராசி நேயர்களுக்கு இருப்பதால் உங்களுக்கு தேவையான வாய்ப்புகள் அனைத்தும் வந்து சேரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் முக்கிய முடிவுகளை எடுப்பது இன்று மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நல்ல நேரத்தை கொண்டாடி மகிழலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டமாக இந்த நாள் உள்ளது. மேலும் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும். எனவே பணிகளை எளிதாக முடிக்க கூடிய நாள் இந்த நாள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை முன்னேற்றமாக இருக்கும். கையில் இருக்கக்கூடிய பணப்புழக்கத்தின் காரணமாக வங்கிகளில் உங்களுடைய சேமிப்பு உயரும். நிதி நிலையில் சுதந்திரமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். ஆரோக்கியமும்  அற்புதமாக இருப்பதால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

மிதுனம்

 மிதுன ராசி நேயர்களே இன்று உங்களின் கடின உழைப்பு காரணமாக நல்ல பலன்களை பெறுவீர்கள். முன்னேற்றகரமான நாளாக இந்த நாள் உங்களுக்கு இருக்கும். இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் தான் அதிக அளவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது.

 தொழிலைப் பொறுத்தவரை என்று நீங்கள் சிறப்பாக பணி செய்யக்கூடிய ஆற்றல் உங்களிடம் அதிகமாக காணப்படும். பணியில் முன்னேற்றம் உள்ளது புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதியை பொறுத்த வரை இன்று சிறப்பான நாள் என்று கூறலாம். கையில் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். பெருந்தொகையை சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் உங்களுடைய மகிழ்ச்சி நிலவும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் திருப்திகரமான நாள் என்று கூறலாம். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

கடகம்

 கடக ராசி நேயர்களே இன்று வெளியிடங்களுக்கு நீங்கள் செல்வதின் மூலம் உங்களது மனம் அமைதியாக இருக்கும் உங்கள் செயல்களில் உணர்வு பூர்வமாக நீங்கள் செயல்படுவதை விடுத்து எதார்த்தமாக எதையும் எதிர்நோக்கி செயல்படுவது தான் மிகவும் நல்லதாக இருக்கும் அமைதியான அணுகுமுறையால் மட்டுமே இன்று நீங்கள் நல்ல பலனை பெற முடியும்.

 தொழிலைப் பொறுத்தவரை குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை தவறுகள் நேரான படி பணியிடத்தை கவனமாக செயல்படவும் மேலும் உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு செய்வது உங்களுக்கு நன்மை தரும்.

 நிதி நிலைமை பொருத்தவரை இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாள் வேண்டாத செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சற்று சுணக்கமான நாளாக இருப்பதால் குளிர்ச்சியான உணவை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். சளி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உடல் ஊனமுற்றோருக்கும், ஏழைகளுக்கும் நீங்கள் பண உதவி செய்வதின் மூலம் நன்மை அடையலாம். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதை நீங்கள் தள்ளி போடுவது மிகவும் நல்லது.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று பணி சுமை அதிகமாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும். சக பணியாளர்களின் மூலம் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக காணப்படும் நாள் என்பதால் பொறுப்புடன் செயல்படவும். இல்லை என்றால் பணவிரையம் ஏற்படும்.

 உங்களது ஆரோக்கியத்தில் சற்று சுழக்கம் இருப்பதால் முதுகு கை, கால் போன்ற பகுதிகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி

 கன்னி ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மனதில் சமநிலை உணர்வுகள் ஏற்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். தன்னம்பிக்கையோடு எதிலும் செயல்படுங்கள் இன்றைய நாள் வெற்றிகரமான நாள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் உங்கள் திறமைகளை நிரூபிக்கக்கூடிய நாளாக இந்த நாள் இருக்கிறது. இதனால் உங்களது மேலதிகாரிகள் உங்களுக்கு பாராட்டுகளை வாரி வழங்குவார்கள். உற்சாகமான நிலையில் நீங்கள் பணியாற்றலாம்.

 நிநி நிலமையை பொருத்தவரை அதிகளவு பணம் சம்பாதிக்க கூடிய நாள். எனவே உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இந்த நாள் அமையும். ஆரோக்கியம் என்று சிறப்பாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

அற்புதமான ஆற்றலோடு இன்று எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கக்கூடிய துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பயனுள்ள வகையில் செல்லும் எனினும் பல அசௌரியங்கள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் துணிந்து எதிர் கொள்ளக்கூடிய நாளாக இந்த நாள் உங்களுக்கு உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் செய்யும் பணியில் வெற்றி காண்பீர்கள். உங்களது தனித்திறமை மேலோங்கி அனைவரது முன்னும் பளிச்சென்று தெரியும். உங்களுக்கு உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கடன்களை பூர்த்தி செய்யக்கூடிய நாளாக இருப்பதால் உங்கள் சேமிப்பு உயரும். பணப்புழக்கம் சராங்கமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த கவலையும் தேவையில்லை என்று ஆரோக்கியம் மிகவும் சிறப்பான நாளாக உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று மிதமான பலன்களே கிடைக்கும். நற்பலன்களை பெற நீங்கள் காண எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். சுய முயற்சிகள் மூலம் நல்ல பலன்களை பெறக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணிகளை எளிமையாக கையாளுவதன் மூலம் நீங்கள் சிறப்பான நிலையை அடைக்கலாம். திட்டமிட்டு உங்கள் பணிகளை செய்தால் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை உங்களுக்கு உரிய பணம் உங்களுக்கு கிடைக்காது. இறுதியாக பணத்திற்காக நீங்கள் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். இதனால் கவலை ஏற்படும்

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டமாக நீங்கள் இருப்பதால் கை, கால்களில் வலி ஏற்படும். அமைதியாக இருந்து எதையும் சாதிப்பது மிகவும் நல்லது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

தனுசு

போராடி எதிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கக்கூடிய தனுசு ராசி நேயர்களே, இன்று முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். செயல்களில் கவனத்தோடு செயல்படுவது மிகவும் முக்கியம். உணர்ச்சிவசப்படுவதை நீங்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மேற்கொள்ளும் போது ஏமாற்றங்களையும், தடைகளையும் நீங்கள் சந்திப்பீர்கள். எனவே சக பணியாளர்களுடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பணிகளில் முன் உரிமையை பயன்படுத்த தக்க நேரத்தில் அந்தப் பணியை முடிக்க எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணம் பற்றிய கவலை அதிக அளவு உங்களுக்கு காணப்படும். அதீத செலவு காரணமாக பணத்தை மிச்சப்படுத்துவது குறையும். எனவே ஈரமான நாளாக இந்த நாள் உங்களுக்கு விளங்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நிலையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதால் அதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு கவலையை கொடுக்கும்.

மகரம்

 மகர ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்தப் பணியையும் முடிக்க இந்த நாளை நல்ல நாளாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியையும், ஏற்றத்தையும் தரும். அமைதியான அணுகுமுறையை எதிலும் காட்டவும். நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய நாள் என்பதால் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதன் மூலம் மேல் அதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். உங்கள் பணி மிகவும் தரமாக உள்ளது என்று அனைவரது பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பாதுகாப்பாக இருக்கும். பணத்தை பொருத்தவரை பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம். உங்களது சேமிப்பு உயரலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆற்றலுடன் எல்லாவற்றிலும் நீங்கள் செயல்படக்கூடிய நாள் என்பதால் ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சீராக இருக்கும் மகிழ்ச்சியும், திருப்தியும் கலந்து கிடைக்கும். நல்ல, நல்ல வாய்ப்புகள் உங்களை வந்து சேரும் உங்கள் முன்னேற்றத்திற்கு உகந்த நாள் என்பதால் இந்த நாளை நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்கள் திறமைகள் அனைத்தும் பளிச்சென்று வெளிப்படும். உங்கள் திறமைகளை நிரூபிக்க கூடிய நாள் என்பதால் உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரமும் என்று உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும்.

 இதனால் உற்சாக உற்சாகரமான மனநிலை உங்களுக்கு இருக்கும் நல்ல முன்னேற்றம் நிதி நிலைமையில் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனதில் அமைதி ஏற்படும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதால் ஆரோக்கியத்தில் எந்த பொருள் பிரச்சனையும் உங்களுக்கு இல்லை.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்கள் செயல்களை சமூகமாக மேற்கொள்ள வேண்டும் என்றால் எதையும் அனுசரித்து போவது மிகவும் நல்லது. நம்பிக்கை இழக்க நேரம் இருப்பதால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. எப்போதுமே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

 தொழில் நிலையை பொறுத்தவரை பணிகள் அதிகமாக காணப்படும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளதால் பணியில் கவனம் தேவை. சகப் பணியாளர்களுடன் பேசும்போதும் நீங்கள் கவனத்தோடு செயல்படுவது நல்லது.

 நிதி நிலமையை பொறுத்தவரை சற்று நிர்வகிப்பது கடினம் என்பதால் உங்களுக்கு கவலை அளிக்கும். எனவே நிதி நிலைமையில் அக்கறை செலுத்துங்கள் இன்று உணர்ச்சிவசப்படக் கூடிய நாள் என்பதால் உங்களது ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம்.

எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள் ஆரோக்கிய குறைபாடு காரணமாக மகிழ்ச்சி குறைவு ஏற்படும்.