“எளிய முறையில் பக்க விளைவு இல்லாமல் பற்கள் வெள்ளையாக வேண்டுமா..!” – அதுக்கு இத செஞ்சாலே போதும்..!

இன்று பற்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்க விஷயம் தான். எனினும் இந்த பற்களை வெண்மையாக மாற்றுவதற்கு எண்ணற்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுவதோடு கேன்சர் போன்ற நோய்களும் வருகிறது என்றால் நமக்கு திகிலாக தான் இருக்கும்.

 எனவே பற்களை நாம் நல்ல முறையில் பராமரிக்கவும், பால் போல பளிச்சென்று  வெள்ளையாக மின்னவும் சில எளிய வழிகளை பயன்படுத்தலாம். அது என்னென்ன வழிகள் என்பதை இப்போது நாம் பார்க்கலாமா.

பற்கள் பள பள என மின்ன

👍உங்கள் பற்களில் மஞ்சள் நிற கரை படிந்திருந்தால் கவலைப்பட வேண்டாம். தினமும் நீங்கள்  பல் துலக்கும் போது சிறிதளவு உப்பை வைத்து பல்லைத் துலக்கி பாருங்கள். நிச்சயமாக உங்கள் பல்லில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கரை நீக்குவதோடு பளிச்சென்று மினுமினுக்கும்.

👍 உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்பது போன்ற விளம்பரங்களை நம்பாமல் நமது முன்னோர்கள் பின்பற்றிய சாம்பல் கரியை கொண்டு உங்கள் பற்களை துலக்கி பாருங்கள். ஒரு வார இடைவெளியில் நீங்கள் சாம்பலைக் கொண்டு துலக்கும் போது பற்கள் பள பள காட்சி அளிப்பதோடு ஈறும் பலமாக மாறிவிடும்.

👍 மேலும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு நீங்கள் ஆரஞ்சு பழத்தின் தோலை கொண்டு உங்கள் பற்களை நன்றாக தேய்த்து விடுங்கள். பிறகு மறுநாள் காலை எழுந்திருந்து வழக்கம்போல் நீங்கள் எந்த பேஸ்டை பயன்படுத்தி பல் தேய்கிறீர்களோ அதை பயன்படுத்தி நீங்கள் பல்லை துலக்கி விடுங்கள்.

 இப்படி செய்வதின் மூலம் உங்கள் பள்ளியில் இருக்கும் மஞ்சள் நிற  கரை மறைந்து விடும். ஏனெனில் வைட்டமின் சி மற்றும் கால்சிய சத்து அதிகமாக ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் உங்கள் பல்லை வலிமையாக்குவதோடு கரையை நீக்கிவிடும்.

👍 இதுபோலவே ஆப்பிள், கேரட், வெள்ளரி ஆகியவை பற்களை வெண்மையாக்க உதவும். எனவே தினமும் இதை சாப்பிட்டு வந்தால் உங்கள் பற்கள் பளிச்சிடுவதோடு உடல் ஆரோக்கியமும் கூடும்.

 மேற்குரிய இயற்கையான வழிகளை நீங்கள் உங்கள் பல் பாதுகாப்புக்கு பயன்படுத்தும் போது பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 இனிமேல் அதிக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி உங்கள் பற்களை வெள்ளை ஆக்குகிறேன் என்று வியாதிகளை காசு கொடுத்து வாங்க வேண்டாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …