” கோடையில் சுவையைக் கூட்டும் பைனாப்பிள் ரசம்..! ” – எப்படி செய்வது பார்க்கலாமா?

மனிதனின் ரசனைக்கு ஏற்ப வித விதமான ரசங்கள் நாம் வைத்து உணவோடு கலந்து சாப்பிட்டிருப்போம். குறிப்பாக தக்காளி ரசம், புளி ரசம். பூண்டு ரசம் மல்லி ரசம்.தூதுவளை ரசம் என விதவிதமாக சாப்பிட்ட நாம்  வித்தியாசமாக  இந்தக் கோடை காலத்தில் சுவையை அதிகளவு கொடுக்கும் பைனாப்பிள் ரசம் எப்படி வைப்பது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பைனாப்பிள் ரசம் வைக்க தேவையான பொருட்கள்

1.தக்காளி இரண்டு

2.பைனாப்பிள் இரண்டு ஸ்லைஸ்

3.புளி சுண்டைக்காய் அளவு

4.உப்பு தேவையான அளவு

5.பருப்புத் தண்ணீர் இரண்டு கப்

6.பூண்டு ஐந்து பல்

7.கருவேப்பிலை

8.கொத்தமல்லி தேவையான அளவு

தாளிக்க

9.கடுகு

10.வரமிளகாய் 11.பெருங்காயம்

செய்முறை

முதலில் சுண்டைக்காய் அளவு புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதனை அடுத்து ஒரு கப் நீரில் பைனாப்பிள் மற்றும் தக்காளி பழத்தை லேசாக வேகவைத்து எடுத்து மசித்து கொள்ளவும்.

இதன் பின்னர் நீங்கள் அடுப்பில் வாணலியை வைத்து இளம் சூட்டில் எண்ணெயை விட்டு கடுகு மற்றும் வர மிளகாய் போடவும்.

 கடுகு வெடித்த உடன் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை அதனுடன் போடவும். புளி கரைசல் நன்கு கொதிக்கும் வரை காத்திருந்து சிறிதளவு உப்பை அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

 இதன் பின்னர் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பருப்பு தண்ணீரை அதில் ஊற்றவும். இப்போது நீங்கள் மசித்து வைத்திருக்கும் தக்காளி, பைனாப்பிள் இரண்டையும் நீரை விட்டு நன்கு கரைத்து வடிகட்டி அந்த நீரை கொதிக்கும் நிலையில் இருக்கக்கூடிய பருப்பு தண்ணீரோடு சேர்த்து விடுங்கள்.

 இதனை அடுத்து நீங்கள் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை அதில் போட்டு சிறிதளவு பெருங்காயத் தூளையும் சேர்த்து போதுமான அளவு உப்பு இருக்கிறதா என்று பார்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.

 இப்போது உங்களுக்கு சூடான சுவையான பைனாப்பிள் ரசம் தயார். இதை சுடச்சுட சுட்ட அப்பளம் அல்லது பொறித்த அப்பளத்தையோ கொண்டு சாசத்தோடு கலந்து சாப்பிடும் போது டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam