பால்கனியில் அரபிக்குத்து குத்திய ஜோனிடா காந்தி.. – தீயாய் பரவும் வீடியோ..! – என்னா ஆட்டம்..!

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் (Nelson). அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது.

இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன்.

அவர் நடித்த டாக்டர் (Doctor) படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் நெல்சன் படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடி இருந்த இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியிருந்தார்.

வெளியானது முதலே வைரல் ஹிட் ஆன இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த பாடலில் மூலம் பிரபலமான பாடகி ஜோனிடா காந்தி பால்கனியில் நின்றபடி இந்த பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam