கோடை காலம் நெருங்கி வந்து இருக்கக்கூடிய எந்த சூழ்நிலையில் உங்களது சரும பாதுகாப்பு ஏற்பட நீங்கள் இன்னும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் சருமம் அதிகளவு கருத்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எனவே இது போன்ற சூரிய ஒளியின் தாக்கத்தால் தோலில் கருமை ஏற்படும் என்று நினைப்பவர்கள் இனி ஜாக்கிரதையாக இந்த குறிப்புக்களை ஃபாலோ செய்து வந்தால் கட்டாயம் உங்கள் தோல் கருகாமல் இருக்கும்.
அப்படி கருக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
டிப்ஸ் 1
கோடை காலத்தில் நீங்கள் போதுமான அளவு நீரை குடிப்பதன் மூலம் உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும். எனவே நீர் குடித்தல் என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. நீங்கள் எந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு தான் உங்களது சருமம் பளபளப்பாகும்.
டிப்ஸ் 2
தண்ணீர் பருகுவதோடு நின்று விடாமல் நீங்கள் பழ சாறுகள் குளிர்பானங்கள் போன்ற திரவ உணவுகளை அதிகளவு உங்கள் உணவோடு எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நஞ்சுகள் எளிதில் வெளியேறும். இதனால் அரிப்பு முகப்பரு, தோல் அலர்ஜி போன்றவை வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்காது.
டிப்ஸ் 3
கோடையில் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நீங்கள் கிளின்சிங் செய்து கொள்வது அவசியமானதாகும். இதன் மூலம் வியர்வை உருவாவது சற்று குறைக்கப்படும். மேலும் பருக்கள் வருவதும் தடைப்படும். இயற்கையான கிளின் சிங்கை நீங்கள் பயன்படுத்தலாம். முடிந்தவரை சல்பேட் இல்லாத க்ளென்சரை பயன்படுத்துங்கள்.
டிப்ஸ் 4
ஆரஞ்சு, எலுமிச்சை, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை நீங்கள் நேரடியாக உட்கொள்ளலாம். இதன் மூலம் வைட்டமின் சி அதிகரிக்கும் உங்கள் உடலில் இது கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும் இதன் மூலம் சரும அமைப்பு சீராகும்.
டிப்ஸ் 5
சருமத்திற்கு தேவையான மாய்ஸ்ரைசலை நீங்கள் பயன்படுத்துங்கள். அப்போது சருமம் வறண்டு போகாமல் இருக்கும். குளித்த பின்பும் குளிப்பதற்கு முன்பும் உங்கள் சருமம் ஈரப்பதமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வைட்டமின் சி கொண்டு செய்யப்படுகின்ற மாய்சுரைசர்களை நீங்கள் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும் மேற்கூறிய டிப்ஸை ஃபாலோ செய்து மிரட்டியடிக்கும் வெயிலிலிருந்து உங்களது சருமத்தை நீங்கள் மிக எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம்.