“உங்கள் ஏ டு இசட் சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும் உருளைக்கிழங்கு..!” – எதற்கு எதற்கு என்று தெரியுமா?

 இன்று இருக்கும் இளநங்கையர்களும் இளைஞர்களும் சருமத்தை பராமரிப்பதிலும் அழகாக தங்களை காட்டிக் கொள்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டு இருக்கிறார்கள். இதற்காக பணத்தை பல வழிகளில் செலவு செய்தும் பியூட்டி பார்க்ளுக்குச் சென்றும் தங்கள் மேனி அழகை மெருகேற்றி காட்டி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இவர்களின் சரும பிரச்சனைக்கு ஏ டு இசட் தீர்வாக இருக்கக்கூடிய உருளைக்கிழங்கை கொண்டு எப்படி எல்லாம் உங்கள் அழகை நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். அதுவும் சிங்கிள் பைசா செலவில்லாமல் என  இந்தக் கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இன்று கண்களுக்கு கீழ் கருவளையம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அதிக நேரம் வேலைக்கு வெயிலில் செல்வதால் கரும்புள்ளிகளும் திட்டு திட்டான கரும்படை தேமல்களும் உருவாகிறது.

மேலும் இவர்கள் சருமம் வறண்டு கவர்ச்சி இல்லாமல் காணப்படும். இந்த குறைபாட்டை எளிதில் நீக்க உருளைக்கிழங்கு ஒன்றே போதும். நீங்கள் உங்கள் விடுமுறை நாளில் இப்படி செய்து உங்கள் மேனி அழகை தகதக என  மின்னும்படி மாற்றிக் கொள்ளலாம்.

பயன் 1

உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம் சாறு கலந்து கொண்டு இந்த கலவையை நன்கு கலக்கி விட்டு காட்டன் பஞ்சால் நனைத்து உங்கள் முகம் முழுவதும் தடவி விடுங்கள் பிறகு 20 நிமிடங்கள் காத்திருந்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவும் போது முகத்தில் தேவையற்றிருக்கும் எண்ணெய் பசை, பிசுக்கு நீங்கி முகம் பளபளப்பாக மின்னும்.

பயன் 2

வெயிலின் தாக்கத்தால் உடல் சருமம் கருகிப்  இவ்வளவு கருப்பாக மாறுகிறது என கவலைப்படுபவர்கள் இதே உருளைக்கிழங்கு சாறை  எடுத்து அதை காட்டன் துணியில் நனைத்து உங்கள் முகத்தில் தடவி விட்டு பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள்.இது வெயிலினால் ஏற்படக்கூடிய கருப்பினை நீக்கக்கூடிய அருமருந்தாக  விளங்கும்.

பயன் 3

கண்களில் வீக்கம் அல்லது கருவளையம் இருந்தால்  உருளைக்கிழங்கு சாரோடு 2 டீஸ்பூன் வெள்ளரி சாறையும் விட்டு அதனோடு சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து கண்ணுக்கு கீழ் உள்ள பகுதிகளிலும் கண்ணின் இமையின் மீதும் நீங்கள் தடவி விட்டு அரை மணி நேரம் அப்படியே கண்களை முடிய படி இருந்த பின் எழுந்து உங்கள் முகத்தை இருக்கும் கண்களை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதின் மூலம் கண் வீக்கம், கண் எரிச்சல் போன்றவை நீங்கும்.

மேற்குரிய அழகுக் குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்து இந்த வெயில் காலத்தில் உங்கள் மேனியை கருக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam