” காசிமா நகர் காவல் தெய்வம் கால பைரவர்..!” நன்மை பல பெற கால பைரவ வழிபாடு…!!

 சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கால பைரவர் பற்றி அதிகமாக பலருக்கு தெரியாது. இந்த கால பைரவரை வணங்கி முடித்தால் தான் காசி யாத்திரையே நிறைவு பெறும் என்று கூறுகிறார்கள். அந்த அளவு சிவபெருமானுக்கு நிகரான ஆற்றல் படைத்த கால பைரவரை எப்படி எல்லாம் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

அந்தகாசுரனை அழிப்பதற்காக கால பைரவ அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த அவதாரத்தை எடுத்தவர் நம் சிவபெருமான் தான். பொதுவாக கால பைரவரை, யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என்றெல்லாம் அழைக்கலாம். இந்த கால பைரவரின் வாகனமாக நாய் திகழ்கிறது.

 தாட்சாயினியை இழந்த சிவபெருமான் தனது மனைவியாகிய தாட்சாயினியை கையில் எடுத்துக்கொண்டு கோபமாக வந்த சமயத்தில் விஷ்ணு பகவானின் சக்கரத்தால்  உயிரற்ற தாட்சாயனியின் உடல் பல துண்டுகளாக பாரத தேசம் எங்கும் விழுந்து சக்தி பீடங்களாக எழுந்தது.

அப்படி விழுந்த இடங்களில் சக்தி கோயில்களை காவல் காக்க சிவபெருமானே பைரவர் வடிவம் தரித்து வந்ததாக கூறுகிறார்கள். நவகிரகங்களில் பிராணராக பைரவர் இருப்பதால் நவகிரகங்களில் எந்த ஒரு கிரக பெயர்ச்சியாலும் தீய பலன்கள் ஏற்பட்டால் காலபைரவரை வணங்கும்போது அவை நீங்கி நற்பயன் கிடைக்கும்.

 காலத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கால பைரவருக்கு இருப்பதால் சனி திசை நடப்பவர்கள் சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் காலபைரவரை வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

 மேலும் கால பைரவரை வழிபட நீங்கள் தாமரை பூ மாலை, வில்வமாலை, தும்பை மாலை, சந்தன மாலையை பயன்படுத்தலாம். கால பைரவரை வணங்கும்போது மல்லிகை பூவை தவிர மற்ற பூக்களை பயன்படுத்துவரின் மூலம் நன்மை கிடைக்கும்.

 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கொண்டாட கூடிய இந்த கால பைரவரை செவ்வாய்க்கிழமை வழி விடுவது சிறப்புத் தரும்.

மேலும் கால பைரவரை வழிபட்டு அவரது மந்திரத்தை 27 முறை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

கால பைரவ மந்திரம்

“ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே

ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ

பைரவ : ப்ரசோதயாத்”

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam