Tuesday, September 24

இன்றைய ராசிபலன் 26 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி   2023 ஞாயிற்றுக்கிழமை. மனிதன் தன் வாழ்நாளில் சகல செல்வாக்கோடு திகழ்வதோடு மட்டுமல்லாமல் அதிகாரங்களையும் அதிகளவு பெற்று பலராலும் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்தில் உயர்ந்த நிற்பதற்கு அவனுக்கு கட்டாயம் கோள்களின் உதவி தேவை.

 அப்படி அவன் உயர்ந்து நிற்பதற்கு மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்படுவதன் மூலம் அவன் வெற்றிகளை அடைய முடியும். ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்றபடி பொதுப் பலன்கள் இருந்தாலும் அவர்களது தசா புத்திகள் மற்றும் கிரகங்களின் உச்ச, நீச்ச தன்மையைக் கொண்டே அவனது வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது.

இதனை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து அவர்களை காத்துக் கொள்வதற்கு இந்த ஜோதிடம் பேரழகு உதவியை அவர்களுக்கு செய்யும். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே இன்று அருமையான நாளாக இருக்க வேண்டிய நாள் என்று நீங்கள் நினைத்தாலும் உங்களுக்கு பயண அலைச்சல்களும் அதன் காரணமாக சோர்வும் ஏற்படும். நல்ல பலன்களை பெறுவதற்கு நீங்கள் அமைதியோடு காத்திருப்பது கட்டாயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை மிகுந்த முயற்சிகள் தான் வேலைகளை நீங்கள் செய்து முடிக்க முடியும்.  மேல் அதிகாரிகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த பாராட்டுக்கள் கிடைக்காது. சற்று கவனத்தோடு பணியாற்றவும்.

நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிக அளவு இல்லை.கடனுக்கு நீங்கள் விண்ணப்பம் செய்து இருந்தால் கடனுக்கான ஒப்பந்தம் உங்களுக்கு விரைவில் முடிந்து கடன் கிடைக்கக்கூடிய நிலை இன்று உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டைகளில் பிரச்சனை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் நீங்கள் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் ஆக்கத்தோடு உங்களுக்கு அமைந்துள்ளதால் எதையும் தைரியத்தோடும் உறுதியோடும் செய்ய நீங்கள் முயற்சி செய்வீர்கள். எனினும் உங்களுக்கு பயணம் காரணமாக சில மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் நீங்கள் உங்களுடைய தைரியத்தையும் உறுதியையும் இழக்க கூடிய சூழ்நிலை அமையும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் நீங்கள் எடுத்த பணியை முடிப்பது சற்று கடினமாக இருக்கும் இது உங்கள் கவலையில் ஆழ்த்தும்.

நிதியை பொருத்தவரை நல்ல முறையில் இருக்காது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள திண்டாடுவீர்கள். எனவே பணத்தில் சற்று கவனமாக இருத்தல் அவசியம்.

 ஆரோக்கியமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை சூடு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். வெப்ப சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் எனவே நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று அட்டகாசமான நாள் என்று கூறலாம். நேர்மறையான மாற்றங்கள் உங்கள் மனதில் மகிழ்ச்சியை பூக்க வைக்கும். இந்த நிலையில் நீங்கள் உறுதியோடு இருந்தால் கட்டாயம் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உங்களுக்கு வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் நீங்கள் வெற்றி அடைய முடியும் பணி சுமை கூடுதலாக இருப்பதால் தவறுகள் நேரிட வாய்ப்புகள் உள்ளதால் கவனத்தோடு செயல்படவும்.

 நிதி நிலையை பொறுத்தவரை பண பற்றாக்குறையை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பண சூழ்நிலைகளில் நீங்கள் பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி, தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை செலுத்துங்கள்.

கடகம்

வெற்றி மேல் வெற்றியை குவிக்க கூடிய கடக ராசி நேயர்களே இன்று முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கும் போது கவனத்தோடு எடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். எனவே எடுக்கின்ற முடிவை யோசித்து நீங்கள் எடுப்பது நல்லது.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை ஒரு பணியினை செய்து முடிப்பதற்கு நீங்கள் திறமையாக செயல்படுவீர்கள். அதே சமயம் பணி நிமித்தமாக பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நல்ல விஷயங்களுக்காக பண செலவு செய்ய வேண்டி வரும். உடன் பிறந்தோர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த ஒரு சுணக்கமான சூழ்நிலையும் இல்லை. உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படுவதால் அதை பற்றி இன்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் நேயர்களே இன்று உற்சாகமான நாளாக அமைந்திருப்பதால் உங்களுக்கு எதிலும் திருப்தி ஏற்படும். உங்கள் இலக்குகளை நீங்கள் நோக்கி பயணம் செய்து வெற்றிகளை எட்டிப் பிடிக்க கூடிய நாள் இந்த நாள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை திறமையாக பணிகளை மிக நேர்த்தியான முறையில் செய்து முடிப்பதின் மூலம் உங்கள் பணிகளுக்கான அங்கீகாரம் உடனே கிடைப்பதால் மகிழ்ச்சி ஏற்படும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை நன்றாக இருக்கும். வங்கிகளில் உங்களது சேமிப்பை அதிகரித்துக் கொள்ள முடியும். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தித் தரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று எந்த விதமான சுணக்கமும் இல்லாத நாள் என்பதால் நீங்கள் ஆற்றலோடும் துடிப்போடும் இருப்பீர்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலை தேவையில்லை.

கன்னி

எதிலும் எச்சரிக்கையோடு இருக்கக்கூடிய கன்னி ராசி நேயர்களே நீங்கள் உங்கள் வருங்காலத்தில் முன்னேற்றத்தை காண வேண்டும் என்றால் கட்டாயம் எதிலும் கவனத்தை செலுத்துவது வேண்டும். அவ்வாறு கவனத்தை செலுத்தும் போது கவனம் சிதறாமல் நீங்கள் செலுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பணி சுமை காரணமாக உங்களுக்கு சில பாதிப்புகள் வந்து சேரும். எனவே கவனத்தோடு பணியிடத்தில் பணி செய்யவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் உற்சாகம் தரக்கூடிய அளவு இல்லை என்பதால் கூடுதல் செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய நீங்கள் உங்களை பழக்கப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன அழுத்தம் காரணமாக கால் வலி, முதுகு விறைப்பு போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இவற்றை நீங்கள் தனித்துக்கொள்ள மனதில் ரம்யமான எண்ணங்களை வளர்ப்பதோடு இரை பாடல்களை கேட்டு வருவது நல்லது.

துலாம்

அற்புதமான நாளாக அமைய வேண்டிய துலாம் ராசி நேயர்களுக்கு இன்று மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.புதிய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருப்பீர்கள்.

 இந்த நாளில் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதை எல்லாம் சரி செய்து வேலைகளை விரைந்து முடிக்க கூடிய அளவு நீங்கள் உற்சாகத்தோடு இருப்பதால் இந்த நாள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பண விஷயங்களில் அதீத கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மேலும் பணத்தை கையாளும்போது கவனத்தோடு கையாளுவது அவசியம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் தொண்டை எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை நீங்கள் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருப்பதால் உங்கள் முயற்சிகளில் நீங்கள் அதிக அளவு வெற்றியை காண்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகள் செய்வது மூலம் உங்களுக்கு நல்ல சலுகைகளும் ஊக்க தொகைகளும் கிடைக்கும். எனவே மகிழ்ச்சியாக உங்கள் பணிகளை விரைந்து முடிக்க கூடிய சூழ்நிலை இன்று தொழில் ஸ்தானத்தில் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை போதிய அளவு பண இருப்பு இருப்பதால் நல்ல செயல்களுக்காக இந்த பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். எனவே நிதியை பொருத்தவரை எந்த ஒரு சுணக்கமும் இல்லை.

 அதுபோலவே ஆரோக்கியமும் சிறப்பான முறையில் இருப்பதால் இன்று தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் நீங்கள் செயல்படுவீர்கள். உற்சாகமான நாளாக இது இருப்பதால் இந்த நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பலனை அடைக்கலாம்.

தனுசு

நியாயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிக அளவு கொண்டிருக்கக் கூடிய தனுசு ராசி நேயர்களே உங்கள் பொறுமை சோதிக்கப்படக்கூடிய நாளாக இந்த நாள் இருப்பதால் நீங்கள் திட்டமிடுவது சிறப்பாக இருக்கும். இந்த திட்டமிடுதல் மூலம் தான் உங்களுக்கு நன்மைகள் திட்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பிரார்த்தனைகள் மற்றும் மந்திரங்களை கேட்பதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

 எனவே பதட்டப்படாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சிறப்பாக பணிபுரிவீர்கள். பதவி உயர்வு பாராட்டுக்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதிநிலைமையை பொறுத்த வரை உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் நிதி நிலைமையைப் பற்றி அதிக அளவு கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. போதுமான அளவு பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

 ஆரோக்கியமும் அதுபோல ஆற்றலுடன் எந்த விதமான கஷ்டமான சூழ்நிலையும் இல்லாத இருப்பதால் நீங்கள் நிச்சயமாக ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். எதைப் பற்றி நீங்கள் யோசித்தாலும் நேர்மறையாக யோசிப்பதின் மூலம் வெற்றி மேல் வெற்றியை இன்று உங்களது ஆக்கிக் கொள்ளலாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாள் என்று கூறலாம். எதையும் வெளிப்படையாக நீங்கள் செய்வதின் மூலம் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உங்கள் செயல்களில் உறுதியோடும் நேர்மறை ஆற்றலையுடன் இருப்பதின் மூலம் நீங்கள் அதிக அளவு நல்ல பயனை பெற முடியும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளை முறையான அணுகு முறையோடு செய்வதின் மூலம் உங்களுக்கு பலன்கள் அதிக அளவு வந்து சேரும். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே நிதியை பொருத்தவரை கவனத்தோடு இருப்பது நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக பேசுவதை தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பேணிப் பாதுகாக்கப்படும். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதோடு எதையும் லேசாக எடுத்துக் கொண்டால் நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது. உணர்ச்சிவசப்படுவதால் உங்கள் ஆரோக்கியத்தில் சுணக்கம் ஏற்படலாம்.

கும்பம்

கும்பராசி நேயர்களே இன்று துடிப்புடன் காணப்படுவீர்கள் உங்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று பயனுள்ள முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக இருப்பதால் எதையும் தைரியத்தோடு நீங்கள் செய்யலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும். உங்கள் பங்கினை நிறைவேற்றுவதற்கு உன்னதமாக திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் உங்கள் காட்டில் மழை என்று கூறும் அளவுக்கு வெற்றி வாகையை சூட முடியும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவுக்கு சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை என்பதால் நிதி நிலையை நன்றாக பாதுகாத்துக் கொள்ளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதால் நீங்கள் உணவு விஷயத்தில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. மிதமான உணவுகளை எடுத்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிக்கலாம்.

மீனம்

அனைவருக்கும் உதவக்கூடிய நல்ல உள்ளம் படைத்த மீன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பிற்போக்கான நாளாக அமைந்திருப்பதால் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வதை கைவிட வேண்டாம். கவலையை விட்டொழித்து தன்னம்பிக்கையோடு நிற்கும் போது எளிதில் வெற்றி இலக்குகளை உங்களால் பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் நல்ல பலன்களை காணலாம். நீங்கள் உங்கள் சக பணியாளர்களின் ஆதரவை பெற்றுவிடுவீர்கள்.

எனவே தொழிலில் கவனத்தை செலுத்துங்கள். நிதி நிலைமை பொறுத்த வரை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு நலமாக இருப்பீர்கள் நீண்ட நாள் நிலுவையில் இருக்கக்கூடிய பணங்கள் கைக்கு வந்து சேரும்.

 ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதையும் ஆற்றலோடு முடிக்கக்கூடிய துணிவு உங்களுக்குள் பிறக்கும் எனவே இந்த நாள் உங்களுக்கு ஒரு இனிமையான நாளாக அமைந்துள்ளது.