40 வயதை தாண்டிய பிறகும்.. 20 வயசு மாதிரியே தெரியனுமா..? – இதை பண்ணுங்க..!

40 வயதை தொட்டுவிட்டாலே இளமை சற்று மாறி சருமங்களில் மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். எப்படி உங்கள் சருமங்கள் தளர்ந்து போகின்ற நிலையில் முகப்பொலிவு இழந்து காணப்பட்டால் உஷராகி உங்கள் இளமையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர இந்த வழிகளை நீங்கள் ஃபாலோ செய்தால் கட்டாயம் 40 திலும் 20 போல நீங்கள் பரிமளிக்கலாம்.

 அதற்காக நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து போதுமானது. இது உங்கள் வயதை கூட்டி காட்டாது, குறைத்தே காட்டும். அப்படிப்பட்ட இளமையை பாதுகாக்க நீங்கள் சரியாக  இதனை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களது அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாற்றி விடுங்கள்.

 நீர்

 உடலில் போதுமான அளவு நீர்சத்தை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு மெயின்டைன் செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் நீரினை அதிகமாக குடிப்பதன் மூலம் எப்போதும் இளமையாக காட்சி தருவீர்கள். எனவே கட்டாயம் 70% ஆவது நீங்கள் போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும்.

நட்ஸ்

 அன்றாட உணவில் நீங்கள் நற்செயல் அதிக அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் இளமை எப்போதும் உங்களுள் இருக்கும். இதற்காக தினமும்  முந்திரி, பாதாம், பிஸ்தா வால்நட் போன்றவற்றை ஒன்று அல்லது இரண்டு வீதம் தினமும் உண்ண வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஒமேகா மூன்று சத்து அதிகம் கிடைப்பதால் உங்கள் சருமத்தை இளமையோடு வைத்துக் கொள்ள முடியும்.

கிரீன் டீ

 கிரீன் டீயில் உள்ள கேட்டசின் பாலிபீனாள்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றத்தையும் அதிகரிப்பதால் எப்போதும் இளமையான தோற்றத்தை இந்த கிரீன் டீ உங்களுக்கு வழங்கும் என்பதால் கிரீன் டீ குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

சாக்லேட்

சாக்லேட்டில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால் இது முதுமை செயல்பாட்டை மெதுவாக ஏற்படுத்தும் எனவே நீண்ட காலமாக நீங்கள் இளமையாக காட்சி அளிக்க வேண்டும் என்றால், தினமும் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால் போதுமானது.

இஞ்சி

 இஞ்சி முதுமையை எதிர்த்து போராடும் ஒரு அற்புதமான மூலிகை என்று கூட கூறலாம். இதில் அதிக அளவு ஃப்ரி ரேடிக்கள் இருப்பதால் உடலில் சருமத்தில் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது. மேலும் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த இஞ்சியை உணவில் எப்போதும் சேர்த்து பாருங்கள் இளமையோடு இருக்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam