OPS : கடந்த ஜூலை பதினோராம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது அதிமுகவின் எடப்பாடி பிரிவு தொண்டர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது இருப்பினும் இது ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது
இந்த நிலைமையில் நேற்று ஓபிஎஸ் அவர்கள் செய்தியாக சந்திப்பை ஒன்றை நடத்தினார் அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் மனோஜ் பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்
அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் பேசியதாவது “ உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது குழு செல்லும் என்று மட்டுமே உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சொல்கிறது உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து சொல்லி புரிய வைக்கும் வகையில் எங்களுக்கு திறமை இல்லை என்று நினைக்கிறோம் பொதுக்கூட்டம் கூட்டியது சரியே எனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி உச்சநீதிமன்றம் ஏதும் கூறவில்லை….என தெரிவித்தார்
மேலும் மனோஜ் பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டதாவது ‘ இபிஎஸ் அவர்கள் இந்த தீர்ப்பை வைத்து தேர்தல் ஆணையத்தை நாட முடியாது எனக் கூறினார்
கடைசியாக பேசிய ஓபிஎஸ் அவர்கள் இந்த தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடாது. இந்த தீர்ப்புக்கு பின் தான் எங்கள் தொண்டர்கள் மிகவும் புத்துணர்வு அடைந்து செயல்படுவார்கள்.
இதுவரை கட்சி உடைய கூடாது என்பதற்காகவே அமைதி காத்து வந்தோம். இது எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய கட்சி இதைத் தொண்டர்களுக்கான இயக்கமாகவே நடத்துவோம் உச்ச நீதிமன்றம் எங்களை கைவிட்டாலும் மக்கள் மன்றம் எங்களை கைவிடாது நாங்கள் மக்களை அணுகுவோம்.
மாவட்டமாக சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்திக்க உள்ளேன் நீதி எங்கள் பக்கமே உள்ளது நிச்சயமாக வெல்வோம் என திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறினார்
இதுபோல அரசியல் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Summary in English : Former Chief Minister O.Paneerselvam has taken an unprecedented step in his political career by attempting to tap into the power of people to achieve a desired result. After losing a case in the high court, Mr. Paneerselvam decided to turn to the general public for support and he is banking on the belief that if enough people are behind him, then it might give him a chance at overturning the decision made by the court.