இன்று பெரும்பாலான வீடுகளில் பெட்டாக பல விதமான விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நிறைய வீடுகளில் லவ் பேர்ட்ஸை அதிக கேர் எடுத்து வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்த்து வரும் அவர்கள் அடிக்கடி அந்த லவ் பேர்ட்ஸ் இறந்து விடுகிறது அல்லது நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை என்ற கவலையில் இருந்தால் கட்டாயம் இந்த உணவு முறைகளை ஃபாலோ செய்து வந்தால் நிச்சயம் நீண்ட நாட்கள் உங்கள் லவ் பேர்ட்ஸ் ஆரோக்கியமாக உயிர் வாழ்வதோடு நிறைய முட்டைகளை பொரித்து இன வீர்த்தியையும் அதிகரிக்கும்.
எனவே இந்த கட்டுரையில் லவ் பேர்ட்ஸ்க்கு என்னென்ன உணவுகளை கொடுக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
லவ் பேர்ட்ஸ்க்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்
👌பொதுவாகவே லவ் பேர்ட்ஸ் தினையை தான் அதிக அளவு விரும்பி உண்ணும் என்பதால் அனைவரும் திணையை மட்டும் லவ் பேர்ட்ஸுக்கு தீனியாக வைப்பார்கள்.
👌நீங்கள் அந்த திணையோடு வாரம் ஒரு முறை ஒரு சிறிய துண்டு பீட்ரூட் ஒரு சிறிய துண்டு கேரட் போன்றவற்றை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ கொடுக்கலாம்.
👌 அதுமட்டுமல்லாமல் அந்த லவ் பேர்ட்ஸுக்கு எந்தவிதமான வியாதிகளும் ஏற்படாமல் இருக்க கற்பூரவள்ளி இலையை கொடுத்தால் அது மிகவும் நன்றாக உண்ணும். இதன்மூலம் அவற்றுக்கு ஏற்படும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும்.
👌 கீரை வகைகளையும் லவ் பேர்ட்ஸ் விரும்பி உண்ணும் என்பதால் அடல்ட் ஆக இருக்கக்கூடிய லவ் பேர்ட்ஸுக்கு நீங்கள் கட்டாயம் கீரைகளை வெட்டி போட்டாலோ அல்லது அப்படியே போட்டாலோ அது சாப்பிடும்.
👌 கொத்தமல்லி இலையை லவ் பேர்ட்ஸ் விரும்பி உண்ணும் என்பதால் அதையும் உணவில் வாரத்தில் இரண்டு முறை சேர்த்துக் கொடுக்கலாம்.
👌 லவ் பேர்ட்ஸ்க்கு நீங்கள் வைக்கின்ற நீரை தினமும் மாற்றி விட வேண்டும் அழுக்குகள் படிந்திருந்தால் அல்லது அதிகமான அழுக்குகள் இருந்தால் நீங்கள் உடனே மாற்றி விடுவது நல்லது. சுத்தமான நீரை எப்போதும் கொடுக்க வேண்டும்.
👌 அதுபோலவே கூடுகளில் அதிகளவு இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி கூட்டினை சுத்தப்படுத்துவதும் மிகவும் நல்லது.
👌 குஞ்சு பொரிக்க கூடிய நிலையில் அல்லது முட்டை வைக்கக் கூடிய நிலையில் இருக்கும் லவ் பேர்ட்ஸ்க்கு கால்சிய கட்டியை கட்டி தொங்க விடுவதின் மூலம் ஆரோக்கியமான முட்டைகள் உருவாவதோடு ஆரோக்கியமான குஞ்சுகளும் நமக்கு கிடைக்கும்.
மேற்கூறிய செயல்முறைகளை நீங்கள் பின்பற்றி பாருங்கள் உங்கள் வீட்டில் லவ் பேர்ட்ஸின் எண்ணிக்கை அதிகம் ஆவதோடு உங்கள் மனதிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
மேலும் உங்களின் மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்து பக்கத்தில் அதற்கான கூடுகளை அமைத்து நீங்கள் வைத்து விடுவதின் மூலம் ஒரு இனிமையான மனநிலையையும் மன அழுத்தத்தையும் குறைக்க கூடிய வகையில் அதனை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.