இன்றைய ராசிபலன் 01 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 01 மார்ச் 2023 புதன்கிழமை. ஒவ்வொரு மனிதனும் நவகிரகங்களின் ஆளுமையில் கற்றுண்டு இருந்தாலும் அவரவர் செய்கின்ற நற்பலன்களின் அடிப்படையில் அவர்களுக்கு பலாபலன் அமைகிறது.  அவரவர் ஜாதக கட்டத்தின் படி நவகிரகங்களின் ஆளுமை மற்றும் அவற்றின் பார்வையின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் செயல்களும் வெளிப்படுகிறது.

 இந்தக் கோள்களின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு  பலன்களை பெற்றாலும் சில பரிகாரங்களின் மூலம் அந்த கிரகங்களை திருப்திப்படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற பலன்களை பெற முடியும்.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதால் நீங்கள் எதையும் சாதித்தது போல உணர்வீர்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருப்பதால் உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும்.பணி புரியும் இடத்தில் திறமையாக நீங்கள் செயல்படுவதன் மூலம் விரைவில் பணிகளை முடிப்பீர்கள்.

 நிதிநிலைமையை பொறுத்து வரை உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். ஊக்க தொகைகள் கிடைக்கும். பல வழிகளில் பணம் வந்து சேரும் இதனால் உங்கள் சேமிப்பு உயரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மனது மட்டும் உறுதியோடு இருப்பதால் நீங்கள் இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று வளர்ச்சியை குறைந்த நாள் என்பதால் உங்கள் பணிகளை விரைவாக செய்து முடிக்க முடியாது. எல்லாவற்றிலும் சுணக்கம் உள்ளது. சோம்பலும் மந்தத்தன்மையும் இருப்பதால் இன்று பெரிதாக நீங்கள் எதையும் சாதிப்பது என்பது  நடக்காது.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய பணிகளை முடிக்க முடியாமல் திணறிவிடுவீர்கள். பணிகள் அதிகமாக இருக்கும் இந்த பணிச்சுமை காரணமாக நீங்கள் திட்டமிட்டு எதையும் கையாளுவதின் மூலம் நன்மை அடையலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காது. கூடுதல் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டாலும் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பருவநிலை மாறுபாடு காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு தொண்டை சம்பந்தமான உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே உங்கள் மனதில் குழப்பமான சூழ்நிலை இருப்பதால் அமைதியின்மையோடு இருப்பீர்கள் உங்களால் முடிவெடுக்கக்கூடிய நிலைமை இன்று இருக்காது. எனவே எந்த முடிவுகளையும் தள்ளிப் போடுவது நல்லது.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியாற்றும் போது அதீத கவனத்தோடு பணியாற்ற வேண்டும். இதில் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது மேலும் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நீங்கள் உங்கள் செலவுகளை மட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் திட்டமிடுதலை சரியாக செய்வதின் மூலம் நீங்கள் வரவு செலவுகளை சரியாக பராமரிக்க முடியும்.

 சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நீங்கள் இன்றைய ஆரோக்கியத்தை பொருத்தவரை எவ்வாறு இருக்க முடியாது. தோள் மற்றும் கணு கால்களில் வலி ஏற்படும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் இருப்பதால் எதையோ இழந்தது போல இருக்கும் எண்ணம் உங்களுக்கும் மேலோங்கி இருக்கும். எனவே அமைதியாக இன்றைய தினத்தை நீங்கள் கழிப்பது மிகவும் நல்லது என்பதை புரிந்து கொள்ளவும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களிடமிருந்தே பிரச்சனைகள் உருவாகும் என்பதால் நீங்கள் அமைதியாக இருங்கள். வீண்பழி உங்களுக்கு வந்து சேரும். இதன் மூலம் உங்கள் வளர்ச்சி தடையாக சாத்தியக்கூறுகள் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டமும் குறைந்தே இருக்கும். முறையாக செலவுகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் பண இழப்பை நீங்கள் தடுக்கலாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை அதிக வெப்பம் காரணமாக தோலில் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியம் அசௌகரியமாக தான் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருப்பதால் மனநிலையில் முன்னேற்றம் இருக்கும். நல்லது நடக்கும் என்ற உணர்வில் மிகவும் மகிழ்ச்சிகரமாக நீங்கள் இருப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் நீங்கள் சிறப்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இந்த போக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை மேலும் அள்ளிக் கொடுக்கும்.

நிதி நிலமையை பொறுத்தவரை என்று உங்களுக்கு கூடுதல் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இது உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்களது சேமிப்புகள் அதிகரிக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் இன்று உற்சாகமாக இருப்பதின் மூலம் ஆற்றல் அதிகரித்து ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

கன்னி

 எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய கன்னி ராசி நேயர்களுக்கு இன்று அமைதி இன்மை காரணமாக உறுதி, மன தைரியம் குறைந்து காணப்படும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் உங்கள் இலக்குகளை அறிய அடிமேல் அடி வைப்பதை கவனமாகக் கொள்ளுங்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியில் சிக்கல்கள் அதிகமாக இருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு உங்கள் பணி நிமித்தமான கருத்துக்கள் செல்லாமல் இருக்கும் வரை நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை செலவுகள் அதிகரிக்க கூடிய நாள் என்பதால் பண பற்றாக்குறை நிலவும். எனவே முறையாக திட்டமிட்டு உங்கள் பணத்தை கையாளும்போது சிறப்பாக இருக்கும்.

 பதட்டமான மனநிலை காரணமாக இன்று உங்களது ஆரோக்கியம் சுணக்கமாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்க கூடிய நாளாக இருக்கும். சகஜமாக நீங்கள் எல்லோரிடமும் பழக வேண்டும். இதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக மாற்றி அமைக்க முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடங்களில் இறுக்கமான சூழ்நிலை நிலவுவதால் நீங்கள் எதிர்பார்த்தவை எதுவும் நடக்காது. என்றாலும் சில கட்டுப்பாடுகளுடன் நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்வது நல்லது.

நிதி நிலைமையை பொறுத்தவரை வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் என்று கூறலாம். எனினும் உங்கள் செலவுகள் அதிகரிப்பதால் அதை சமாளிக்க என்ன செய்வது என்பதை யோசியுங்கள். கடன் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஒவ்வாமை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்படலாம். உடனே அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.

விருச்சிகம்

 விருச்சிக ராசி அன்பர்களே இன்றைய நாள் மிகவும் கடினமான நாளாக இருப்பதால் உங்களுடைய பதட்டம் அதிகரித்து காணப்படும். இந்த பதட்டத்தை நீங்கள் தனித்துக்கொள்ள கட்டாயம் பிரார்த்தனை மற்றும் வழிபாடு யோகா போன்றவற்றை உங்கள் மனதை செலுத்துவது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகமாக இருக்கும். நேரம் அதை செய்து முடிக்க குறைவாக இருப்பதால் உங்களுக்குள் ஒரு வேகம் மன அழுத்தம் ஏற்படும்.எனவே குறித்த காலத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டு பணிபுரியுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியம் மிக சுலபமான விஷயம் அல்ல என்பதை உணர்வீர்கள். பணம் பல வகைகளில் இருந்து வந்தாலும் தேவையற்ற செலவுகள் காரணமாக செலவாவதை உங்களால் தடுக்க முடியாது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன அழுத்தத்தின் காரணமாக உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம். தியானம் உடற்பயிற்சி, பிரார்த்தனை இவற்றை மேற்கொள்வதின் மூலம் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

தனுசு

 தனுசு ராசி நேயர்களே இன்று பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கடினமான பணிகளை கூட எளிதில் முடிக்க கூடிய ஆற்றல் உங்களுக்குள் ஏற்படும். எளிய முறையில் உங்கள் இலக்குகளை அடைந்து அதன் மூலம் திருப்தி அடைவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மிகவும் சுமூகமான சூழ்நிலை நிலவுவதால் மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் உதவியும் உங்களுக்கு அதிக அளவு கிட்டும். இதன் மூலம் தொழிலில் நீங்கள் சாதிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பெறுத்தவரை உங்களிடம் பணப்புழக்கம் இன்று ஓரளவு நன்றாக இருக்கு.ம் முயற்சி காரணமாக அதிக அளவு பணத்தை சம்பாதிக்கலாம். கணிசமான சேமிப்பை உயர்த்தக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பக்தியோடு நீங்கள் இருங்கள் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள். மனத்தை நேர்மறையான ஆற்றல்களில் செலுத்துவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பேணப்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று எல்லா செயல்களையும் செய்தாலும் நீங்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலைகள் உள்ளதால் பொறுப்புடன் செயல்படுங்கள். வளர்ச்சியும் வெற்றியும் எளிதாக வரக்கூடிய நாள் என்பதால் முக்கிய முடிவுகளை நீங்கள் இன்று எடுப்பது நல்லது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை சாமர்த்தியமாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உங்களிடம் மேலோங்கும். தொழில் சார்ந்த அணுகுமுறைகளை நீங்கள் மேற்கொண்டு தொழில்களை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து கூடுதலாக பணம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஊக்கத்தொகை கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்துள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த சுணக்கமும் இல்லை என்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

 கும்ப ராசி அன்பர்களே என்று சில பிரச்சனைகளை சந்திக்க நேரம் என்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது. மன உறுதியோடு செயல்படுங்கள்.  சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நேர்மறையான எண்ணங்களை நீங்கள் ஏற்படுத்தி கொள்வது நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவோடு இருக்க முடியாது. எனவே மோதல்கள் ஏற்பட்டு சிறு சிறு பிரச்சனைகள் மற்றும் குழப்பம் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் தொழிலில் கவனத்தோடு இருங்கள்.

 நிதி நிலைமையும் என்று உங்களுக்கு சாதகமாக இல்லை செலவுகள் அதிகரிக்க கூடிய நாள் என்பதால் நீங்கள் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே நிதி நிலைமையை பற்றி எண்ணி அதற்குத் தகுந்தது போல் செலவு செய்யவும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை மனக்குழப்பம் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். கை ,கால் மற்றும் கணு கால்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கவனத்தோடு இருங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருப்பதால் வளர்ச்சி குறைந்து காணப்படும். ஏமாற்றங்கள் நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் எதை எப்படி செய்வது என்பதை யோசித்த வண்ணம் இருப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை சக பணியாளர்களிடம் ஈகோ போக்கை காண்பீர்கள். உங்கள் வளர்ச்சி குறித்து அவர்கள் சிறிது பொறாமை கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். சேமிப்பு குறைந்து இருக்கும். பணத்தை குறித்து எந்த முடிவையும் இந்த நாளில் நீங்கள் எடுக்க வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உயர் இரத்த அழுத்தம் பதட்டம் காரணமாக ஏற்படும். தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …