“அடிவயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்..!” – ஈசியா மறைய பாட்டி வைத்தியம்..!!

கர்ப்ப காலத்துக்கு பின்னால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் போது ஸ்ட்ரெட்ச் மார்க் இயல்பாக உருவாகிவிடுகிறது. இந்த ஸ்கெட்ச் மார்க்கை குறைப்பதற்கும், இருந்த இடம் தெரியாமல் மறைப்பதற்கும் பலவிதமான வழிகளை கையாளுகிறார்கள்.

அதற்காக பல விதங்களில் பணத்தை செலவு செய்து வரும் பெண்கள் இந்த குறிப்புக்களை ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் இருந்தே நீங்கள் உங்கள் ஸ்ட்ரெச் மார்க்கை ஈசியாக மாற்ற முடியும்.

ஸ்ட்ரெச் மார்க்கை நீக்க உதவும் வழிகள்

💐பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் இவை நான்கையும் சம அளவு எடுத்துக் கொண்டு ஒரு பாட்டிலில் கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் சிறிதளவு எடுத்து உங்கள் ஸ்ட்ரெஸ் மார்க் இருக்கும் இடத்தில் நன்கு மசாஜ் செய்துவிட்டு பிறகு சூடான நீரில் நனைத்து துணியை அந்த இடத்தில் ஒத்தடம் கொடுப்பது போல் அழுத்தி எடுக்கவும்.

💐சர்க்கரையோடு, பாதாம் எண்ணெயை நன்கு கலந்து இதனை  ஸ்கெட்ச் மார்க் இருக்கும் இடத்தில் வட்ட இயக்கத்தில் நீங்கள் மசாஜ் செய்வதின் மூலம் உங்களது ஸ்கெட்ச் மார்க் நீங்கும். மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்குப் பிறகு சுடுநீரில் கழுவி எடுங்கள்.

💐 உருளைக்கிழங்கு சாறு மற்றும் அன்னாசி பழச்சாறு இரண்டையும் நன்றாக கலந்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

 💐 அரை ஸ்பூன் பாதாம் எண்ணெயோடு காபி தூளை கலந்து ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கிளாக் வைசில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து முடித்த பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

💐 உருளைக்கிழங்கை அரைத்து சாறெடுத்து குளிப்பதற்கு முன்பு ஸ்ட்ரெச்மார்க் உள்ள பகுதியில் தடவி விட்டு நீங்கள் அரை மணி நேரம் கழித்து குளிக்கச் செல்லவும். இதுபோல் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் ஸ்ட்ரெஸ் மார்க் உங்களுக்கு குறையும்.

💐 மஞ்சத்தூள் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து பேஸ்ட் போல் மாற்றி ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் இடத்தில் நீங்கள் 15 நிமிடங்கள் தடவி அப்படியே விட்டு விடவும்.

💐 இதனை அடுத்து இதனை நீங்கள் பப்பாளி மற்றும் கற்றாழையை கலந்து ஜில்லி போல் வந்த பதத்தில் நீங்கள் ஸ்ரெட்ச் மார்க் இருக்கும் பகுதியில் தேய்த்து விட்டு அப்படியே இருபது நிமிடங்கள் ஊற விடவும் இதனை அடுத்து வெந்நீரில் நீங்கள் நன்கு கழுவி எடுக்கவும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam